உறவினர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து சமைத்துச் சாப்பிட்டுவிட்டு, பழைய கதைகள் பல பேசிக் கொண்டும் ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டும் நகைச்சுவைகளுடனும் அன்றைய நாள் ரொம்ப இனிமையாகவும் சந்தோசமாகவும் கழிந்தது.
யட்சி 24
கிராமப்புற மக்களின் அன்பும் பாசமும் ஒற்றுமையும் கள்ளங்கபடமற்ற உள்ளங்களும் என்னை ரொம்பவே ஆச்சரியப்படுத்தியது. பல வருடங்களுக்குப் பின்னர் அம்மா முகத்தில் எல்லையில்லா மகிழ்ச்சியினையும் என்னால் பார்க்க முடிந்தது. யாமினியும் வருணும் கூட அவர்களுடன் ரொம்பவே ஐக்கியமாகியிருந்தனர்.
இரவும் ஆகிவிட்டிருந்தது. எனக்கு நேரம் போனதே தெரியவில்லை. வந்தவர்கள் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக அவரவர் வீடுகளுக்குச் செல்ல ஆரம்பித்திருந்தனர். அவர்களையெல்லாம் வழியனுப்பிவிட்டு நான் முற்றத்தில் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு விக்னேஷுடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்பொழுது வாட்ஸாப்பில் மெசேஜ் ஒன்று வந்திருந்தது.
“உங்க கூட கொஞ்சம் தனியா பேசணும்.”
என்று யாமினி அனுப்பி இருந்தாள்.
“சொல்லுங்க”
“நேர்ல பேசணும்.”
“என்ன பேசணும்?”
“நேர்ல சொல்றேன்.”
“எங்க?”
“வெளிய”
“அம்மாவும் சித்தியும் எங்க?”
“அவங்க டீவி பாத்துட்டு இருக்காங்க. கீர்த்தனா தலவலின்னு தூங்குறா.”
“வருண்?”
“அவன் அடுத்த ரூம்ல தான் இருக்கான். அதனால தான் வெளிய பேசலாம்ன்னு சொல்றேன்.”
“சரி.. நீங்க வெளிய வாங்க.”
“விக்னேஷ் இருக்காரே.”
“அவன் ப்ராப்ளம் இல்ல. சொன்னா கெளம்பிடுவான்.”
“ஹ்ம்ம்.”
என்று அவள் வெளியே வந்து என்னதருகில் வந்து உட்கார்ந்து கொள்ள விக்னேஷ் எழுந்து உள்ளே சென்றான்.
“ஹ்ம்ம். சொல்லுங்க. என்ன பேசணும்?”
“அது வந்து..”
“சொல்லுங்க.”
“உங்ககிட்ட இத சொல்லலாமா வேணாமான்னு எனக்கு தெரியல. ஆனா உங்ககிட்ட தான் சொல்லியும் ஆகணும்.”
“சரி. எதுன்னாலும் பரவால்ல. சொல்லுங்க.”
“இன்னைக்கு வந்திருந்தார்ல உங்க பெரியப்பா.”
“எந்த பெரியப்பா?”
“பெரிய மீச வச்சிருந்தாரே”
“ஆமா. அவருக்கு என்ன?”
“இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி எங்க அப்பா கால் பண்ணாரு. எல்லா பக்கமும் ஆளுங்க இருந்தாங்க. ரொம்ப சத்தமா வேற இருந்திச்சு. அதனால நம்ம கார்ல ஏறி இருந்து பேசிட்டு இருந்தேன். பேசி முடிச்சதும் இறங்கலாம் ன்னு கதவ திறந்தேன். அப்போ..”
“சொல்லுங்க.”
“அப்போ.. அந்த பக்கமா உங்க அம்மா வந்தாங்க. உங்க பெரியப்பாவும் பின்னாலயே வந்தாரு. அப்புறம்.. அவரும் உங்க அம்மாவும் பேசிக்கிட்டாங்க. அத நா கேட்டேன்.”
“என்ன பேசிக்கிட்டாங்க?”
“அவங்க பேசிகிட்டதுல இருந்து எனக்கு புரிஞ்ச விஷயங்கள உங்ககிட்ட சொல்றேன்.”
“ஹ்ம்ம்.”
“உங்க பெரியப்பாவோட ப்ரெண்ட் ஒருத்தரு. பேரு ராகவன். உங்க அம்மாவும் அவரும் லவ் பண்ணி இருக்காங்க. ஆனா உங்க தாத்தா பாட்டி அவங்க லவ்வ ஏத்துக்காம கட்டாயப்படுத்தி உங்க அப்பாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்களாம். அப்புறம் அவருக்கு உங்க அம்மாவ மறக்க முடியாம இன்னும் கல்யாணம் கூட பண்ணிக்கலையாம்.”
“உண்மையாவா சொல்றீங்க?”
அதிர்ச்சி தாங்க முடியாமல் அவளிடம் கேட்டேன்.
“ஆமா. அவங்க அப்டித்தான் பேசிக்கிட்டாங்க. உங்க பெரியப்பா தான் அந்தக் காலத்துல அவங்க லவ்க்கு ஹெல்ப் பண்ணி இருக்காரு போல.”
“சரி.. மெயினா என்ன பேசிக்கிட்டாங்க?”
“உங்க அம்மா தான் அவரு இப்ப என்ன பண்றாரு, எங்க இருக்காருன்னு அவர பத்தி விசாரிச்சாங்க. அவரு பதில் சொன்னாரு. அவ்ளோ தான்.”
“ஹ்ம்ம். பாவம். அந்தக் காலத்து லவ். ரொம்ப உண்மையா லவ் பண்ணி இருப்பாரு போல. இப்ப வரைக்கும் கல்யாணம் கூட பண்ணிக்கலன்னா அவரு லவ் எந்த அளவுக்கு உண்மையா இருந்திருக்கும். இல்ல?”
“ஹ்ம்ம். கிரேட் மேன்.”
“அவர எனக்கு பாக்கணும் போல இருக்கு.”
“பாத்து என்ன பண்ண போறீங்க?”
“தெரியல. ஜஸ்ட் பாக்கணும். கீர்த்தனா கிட்ட சொன்னீங்களா?”
“அவகிட்ட சொல்லல. தலவலின்னு தூங்குறா.”
“ஹ்ம்ம். அவகிட்டயும் சொல்லிட்டு நாளைக்கே நாம அவர போய் பாக்கலாம்.”
“ஹ்ம்ம்.”
“பாவம். அந்த டைம்ல அவரு மனசளவுல எந்த அளவு கஷ்டப்பட்டிருப்பாருல்ல?”
“ஹ்ம்ம். பாவம்.”
“இந்த பேரண்ட்ஸ் எல்லாரும் ஏன் தான் இப்டி இருக்காங்களோ தெரியல. புள்ளைங்க ஆசப்படுறவங்களையே கல்யாணம் பண்ணி வச்சிட்டா எந்த ப்ராப்ளமும் இல்லயே. இப்ப பாருங்க. எங்க அம்மா லைஃப்லயும் நிம்மதி இல்ல. அவரு லைஃப்லயும் நிம்மதி இல்ல. தாத்தா பாட்டி பாத்து கல்யாணம் பண்ணி வச்ச எங்க அப்பா சின்ன வயசுலயே போய்ட்டாரு.” நான் மனது வலிக்க அவளிடம் கூறினேன். எனது குரலில் ஒரு தழுதழுப்பும் இருந்தது.
“ஹேய். என்ன இது கார்த்திக். எதுக்கு அழறீங்க?”
“அழல. கஷ்டமா இருக்கு. மனசுக்கு புடிச்ச பொண்ணு கிடைக்கலன்னா அந்த வேதன எப்டி இருக்கும் ன்னு எனக்கு நல்லாவே தெரியும்”
“ஐ ஆம் சாரி கார்த்திக். ஆனா, சைக்கிள் கேப்ல என்ன குத்தம் சொல்லாதீங்க.”
“உங்கள குத்தம் சொல்லல. உங்க அப்பா அம்மா உங்களுக்கு மாப்ள பாக்குறப்போ என்ன பத்தியும் கொஞ்சம் கன்ஸிடர் பண்ணி இருக்கலாம் ல?”
“அத அவங்ககிட்ட தான் கேக்கணும். நா போய் சொல்ல முடியாதுல்ல. உங்கள பத்தியும் கன்ஸிடர் பண்ணுங்கன்னு.”
“நானும் கொஞ்சம் பணக்காரனா இருந்திருந்தா, பென்ஸ் கார் வச்சிருந்தா, இல்லன்னா டாக்டரா இருந்திருந்தா உங்க பேரண்ட்ஸ்க்கும் என்ன பிடிச்சிருக்கும்ல?”
“எதுக்கு இப்டி பேசுறீங்க? எங்க அப்பா அம்மா ஸ்டேட்டஸ் பாத்து யார்கூடயாச்சும் பழகி இருக்காங்களா? ஒரு நாளும் அவங்க யாரும் பணம் பத்தியோ இல்லன்னா ஸ்டேட்டஸ் பத்தியோ பாக்க மாட்டாங்க. அவங்க டாக்டரா இருக்கிறதனால எனக்கும் ஒரு டாக்டர் மாப்ள கெடச்சா நல்லா இருக்கும் ன்னு யோசிக்கிறாங்க. அவ்ளோ தான். அதுக்காக டாக்டர் தான் ஒசத்தி ன்னு இல்ல. நீங்க மட்டும் என்ன சும்மாவா? நீங்களும் இன்ஜினியர் தானே.”
நான் எதுவும் பேசவில்லை. அவளே தொடர்ந்தாள்.
“உங்க மேலயும் உங்க குடும்பத்து மேலயும் நல்ல அபிப்ராயம் இருக்குறதனால தான் அவங்க என்னையும் உங்க கூட டூர் அனுப்பி இருக்காங்க.”
“ஹ்ம்ம். ஐ ஆம் சாரி யாமினி. கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்.”
“இங்க பாருங்க. இப்ப அப்பா என்கூட பேசுனாருன்னு சொன்னேன்ல. விக்ரம் வீட்ல இருந்து கால் பண்ணி நடந்த விஷயங்கள பத்தி விசாரிச்சாங்களாம். நீ எதுக்கு இதெல்லாம் சொன்ன ன்னு அப்பா என்ன திட்றாரு. ஆனா, சத்தியமா சொல்றேன். விக்ரம எனக்குப் பிடிக்கல. அவர்கிட்ட நா இதெல்லாம் சொன்னதும் நா எதிர்பார்த்த மாதிரி அவரு நடந்துக்கல. உண்மைலயே அவருக்கு என்ன பிடிச்சிருந்தா அவரு இந்த விஷயங்கள அவங்க பேரண்ட்ஸ் கிட்ட சொல்லாம மறச்சி இருப்பாரு. ஆனா அவரு மனசுல ஏதோ தப்பா தோணி இருக்கும் போல. அதனால தான் அந்த விஷயங்கள அவங்க பேரண்ட்ஸ் மூலமா தெரிஞ்சிக்க பாக்குறாரு.”
“என்ன தெரிஞ்சிக்கப் பாக்குறாரு?”
“அன்னைக்கு நடந்த சம்பவத்துல என்னையும் அவங்க ஏதாச்சும் பண்ணி இருப்பாங்களான்னு யோசிக்கிறாரு போல.”
“இதுல என்ன இருக்கு? அன்னைக்கு நடந்தது ஒரு ஆக்ஸிடண்ட். அத பத்தி யோசிச்சு என்ன பண்றது?”
“ஹ்ம்ம். சில பேரு அப்டி தான் கார்த்திக். அவங்க மனசு குப்பைய விட மோசமா இருக்கும். அப்டி தான் இந்த விக்ரமும்.”
“இன்னைக்கு விக்ரம் உங்க கூட பேசுனாரா?”
“இல்ல. நானும் அவரு கால் பண்ணுவாருன்னு ரொம்பவே எதிர்பார்த்தேன். ஆனா பண்ணல. அவரு அப்பாவ வச்சி எங்க அப்பா கிட்ட பேசி இருக்காரு.”
“ஹ்ம்ம். உங்க அப்பா என்ன சொன்னாரு?”
“அவரு எதுக்கு இதெல்லாம் பத்தி சொன்ன ன்னு என்ன திட்டுனாரு. ஆனா, நா சொன்னேன், இதுவே கல்யாணத்துக்கு அப்புறம் தெரிஞ்சிருந்தா அவருக்கு எந்த ஒரு சந்தேகமும் வந்திருக்காது. ஆனா இப்பவே தெரிஞ்சதனால அவரு மனசு பத்தி நா நல்லாவே புரிஞ்சிக்கிட்டேன். எனக்கு அவர பிடிக்கல ன்னு சொல்லிட்டேன்.”
“அப்பாகிட்ட பிடிக்கலன்னு சொல்லிடீங்களா?”
“ஆமா.. அன்னைக்கு எனக்கு எதுவுமே நடக்கலங்குறதனால பரவால்ல. ஆனா ஏதாச்சும் நடந்திருந்தா விக்ரம் என்ன பண்ணுவாரு ன்னு தான் நா யோசிச்சேன். அப்டி ஏதாச்சும் நடந்திருந்தா என்ன வேணாம் ன்னு சொல்லி இருப்பாருல்ல? இல்லன்னா கல்யாணத்துக்கு அப்புறம் இப்டி நடந்தா என்ன டைவர்ஸ் பண்ணி இருப்பாருல்ல?”
“ஹ்ம்ம். இப்பவாச்சும் புரிஞ்சிதே. அதுவே சந்தோசம். நீங்க என்ன கல்யாணம் பண்ணிக்கலன்னா கூட பரவால்ல. ஆனா விக்ரம் மாதிரி ஒருத்தன் உங்களுக்கு லைஃப் பார்ட்னரா வர எனக்கு விருப்பம் இல்ல.”
“ஹ்ம்ம். நீங்க நெனச்சது போலவே நடந்திருச்சி. சந்தோசமா இருங்க. ஹாஹா.”
“இவன் இல்லன்னா என்ன? இன்னொருத்தன பாக்க போறாரு உங்க அப்பா. இதுல நா சந்தோசப்பட என்ன இருக்கு?”
“…………….”
“ஹ்ம்ம். நீங்க உங்க அப்பா சொல்றவங்களையே கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருங்க.”
“நீங்க கூட இங்க இருக்குற உங்க மாமா பொண்ணுங்க 3 பேர்ல யாரையாச்சும் ஒராள கல்யாணம் பண்ணிக்கலாமே. எல்லாருமே ரொம்ப அழகா இருக்காங்க.”
“ஹ்ம்ம். பாக்கலாம். பாக்கலாம்”
“என்ன பாக்கலாம்? நீங்க தான் அவங்கள பாத்ததும் அவங்க கூட வலிஞ்சி வலிஞ்சி பேசிட்டு இருந்தத நானும் பாத்தேனே.”
“ஆமா. நா எல்லார் கூடையும் தான் பேசுனேன். ஏன்னா அவங்க எங்க ரிலேட்டிவ்ஸ். பேசத்தானே வேணும்.”
“ஆனாலும் நீங்க அந்த பொண்ணுங்க கூட பேசும் போது கொஞ்சம் வலிஞ்சி பேசுனதையும் நா பாத்தேன்.”
“ஹாஹா. எனக்கு சும்மாவே பொண்ணுங்க கூட பேச கூச்சமா இருக்கும். இதுல அவங்க கூட வலிஞ்சி வலிஞ்சி எங்க பேச? நா சும்மா கேஷுவலா பேசுனது உங்களுக்கு அப்டி தெரிஞ்சிருக்கும் போல.”
“ஹாஹா”
“ஒண்ணு சொல்லவா?”
“என்ன?
“எனக்கு எங்க அம்மாவையும் கீர்த்தனாவையும் ரொம்ப பிடிக்கும். அதுக்கப்புறம் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு பொண்ணுன்னா அது நீங்க தான். நீங்க இங்க இருக்கும் போது நா வேற பொண்ணுங்க கூட வலிஞ்சி பேசுறேன்னு சொன்னா நம்புற மாதிரியா இருக்கு?”
“ஆம்பளைங்க எல்லாரும் அப்டி தானே.”
“எப்டி?”
“கொஞ்சம் அழகான பொண்ணுங்கள பாத்தா போய் வலிஞ்சிகிட்டு நிப்பீங்க”
“ஹாஹா. அந்த லிஸ்ட்ல என்னையும் சேக்காதீங்க. ஏன்னா.. நா ஒரு ஏக யாமினி விரதன்.”
“ஹாஹா. நம்பிட்டேன்.”
“என்ன விட ஒருத்தன் உங்களுக்கு கிடைக்க மாட்டான். அத மட்டும் புரிஞ்சிகோங்க.”
“ஹ்ம்ம்.. பாக்கலாம் பாக்கலாம்.”
“என்ன பாக்கலாம்?”
“வரப் போறவன் உங்கள விட இருப்பானான்னு தான்.”
“வரப்போறவன் லிஸ்ட்ல என்னையும் சேத்துக்க மாட்டிங்களா?”
“அத அப்பாதான் முடிவு பண்ணனும். அது நீங்களா கூட இருக்கலாம்?”
“உங்க அப்பா என்னயெல்லாம் பத்தி எங்க யோசிக்கப் போறாரு?”
“அவர உங்கள பத்தி யோசிக்க வைக்க வேண்டியது உங்க பொறுப்பு.”
“அப்போ அப்பா ஓகே சொன்னா என்ன நீங்க கல்யாணம் பண்ணிப்பீங்களா?”
“அப்பா சொன்னா ஓகே தான்.”
“ஹாஹா. ரொம்ப தேங்க்ஸ் யாமினி.”
“எதுக்கு தேங்க்ஸ்?”
“என்ன லவ் பண்றேன்னு சொன்னதுக்கு.”
“நா எப்ப லவ் பண்றேன்னு சொன்னேன்?”
“அப்பா ஓகே சொன்னா உங்களுக்கு ஓகே தானே.”
“ஹ்ம்ம்.”
“அதுலயே உங்களுக்கு என்ன பிடிச்சிருக்குன்னு சொல்லிடீங்களே. ஐ லவ் யூ டூ.”
“அப்பா சொன்னா யார வேணா ஓகே சொல்லுவேன். அப்போ அவங்களையும் லவ் பண்றேன்னு அர்த்தமா? ஹாஹா.”
“போடி கொரங்கு.”
“என்ன பாத்தா கொரங்கு மாதிரியா இருக்கு?”
“ஆமா”
“அப்போ கொரங்க எதுக்கு லவ் பண்ணனும்?”
“என்ன பண்றது? இந்தக் கொரங்கத் தானே எனக்கு பிடிச்சிருக்கு.”
“ஓஹ். சார் ரொம்பத்தான் அலுத்துக்குறீங்க. நீங்க பேசாம உங்க மாமா பொண்ணுங்கள்ள யாரையாச்சும் லவ் பண்ணுங்க.”
அவள் அப்படிக் கூறும் போது, கீர்த்தனா எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள். நான் பதில் சொல்லாமல் அவளையே பார்த்துக்கொண்டிருக்க, நேராக என்னை நோக்கி வந்தவள், எனது மடியினில் அமர்ந்து கொண்டு எனது நெஞ்சினில் சாய்ந்து கொண்டாள்.
“என்னாச்சிடி?”
“தலவலி உசுரு போகுதுண்ணா.”
“ஹ்ம்ம். படுத்துக்கோ. சரியாயிடும்.” என்றவாறு நான் அவளை அணைத்துக் கொண்டு எனது விரல்களை அவளது கூந்தலுக்குள் விட்டு அவளது தலையினை மசாஜ் செய்ய ஆரம்பித்தேன். அவள் கண்களை மூடிக்கொண்டு எனக்குள் அணைந்து படுத்துக் கொண்டாள்.
தொடரும்…
Mail and Gchat:
ungalnanban101010@gmail.com
Seekkiram poda parunga stories a
Next part a eppo poduvenga
👌👌👌👌👌
More story
Unga story vanthurkanu ovoru time vanthu check panitu yamanthu poitran konjam daily upload pannungalen please
Me too 😄😄
சூப்பர் ஸ்டோரி
I’m a fan of this series bro… Please put 3 parts per day… I’m eagerly waiting bro..
வந்தாள் வசந்த சேனை… வாழ்த்துக்கள்…
Contune bro.i am enjoy bro sister love& yamini love
Bro next episode please story intresting sister love and romance
Next episode bro series super aa iruku
Sure
Super pa
Konjam seekiram strories update pannunga please
Next
Next episode eppo poduviga
Hi malar