நண்பனுக்காக,,,,?!!!?

Posted on

நண்பனுக்காக நான் போட்ட மாஸ்டர் பிளான்

அது என் நண்பனுக்கே தெரியாது

என் நண்பனுக்கு கல்யாணம் ஆகாமல் நீண்ட நாட்களாக வருத்தம் கொண்டிருந்தான்

நானும் அவனுக்கும் ஒரு கல்யாணமாகி அவனும் என்னை போலவே குடும்பம் குழந்தைகள்னு கஷ்ட படனும்னு நினைச்சு ஒரு நல்ல காரியத்தை செய்தேன்

ஏன்னா அவன் என்னை எப்போதுமே கலாய்த்துக் கொண்டே இருந்தான்

அவனை பழிவாங்க எண்ணினேன்

அவன் என் நண்பன் நான் அவனுக்கு கெட்டது நினைக்க மாட்டேன்

அதே நேரத்தில் அவனுக்கும் என்னை போல ஒரு திருமண வாழ்க்கை அமைந்தாலே அதுவே நான் அவனை பழி தீர்த்தது போல என்று அவனுக்கு ஏற்ற பெண்ணை நானும் எனக்கு தெரிந்தவர்களிடம் சொல்லி வைத்தேன்

அவன் படிப்பு 12 வது மட்டுமே

அவனுக்கு விவசாய நிலம் இருந்தது

அவனுக்கு விவசாயம் மட்டுமே தெரியும்

அவனுக்கு அப்போது வயது 34

அந்த நிலைமையில் அவனுக்கு பெண் கொடுக்கவே யாரும் முன்வரவில்லை

அவன் மிகுந்த மன வேதனையில் இருந்தான் அவனுக்கு அம்மா இல்லை அப்பா மட்டுமே அவருக்கும் வயதாகிவிட்டது

அப்போது எல்லாம் தாமதமான வயதில் தான் திருமணம் நடக்கும்

அப்படி அவர் தாமதமான திருமணம் செய்து

நீண்ட வருடங்களாக குழந்தை இல்லாமல்

நீண்ட வருடம் கழித்து பிறந்தவன் தான் என் நண்பன்

அவனுக்கு சரியான‌ துணை வேண்டும் அதே நேரத்தில் அந்த பெண் அவனை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன்

அவனின் அழுகை மனதை வாட்டியது

அவன் தன் சாதி இல்லாட்டியும் பரவாயில்லை என்று கூறி வேதனை பட்டான்

அப்போது தான் நான் ஒரு ஃப்ளான் போட்டேன்

நான் இந்த காம தளத்தை அடிக்கடி பார்ப்பேன்

இதில் பலர் பலவிதமான கதைகளை எழுதி பல விதமாக ட்ரை பண்றாங்க நாம் ஏன் வித்தியாசமாக ட்ரை பண்ணக்கூடாதுனு யோசித்தேன்

ஒரு வழி கிடைத்தது

நான் காதல் காமம் கலந்த கதைகள் வித்தியாசமாக எழுதுவதில் ஆர்வம் கொண்டவன்

எனக்கே இந்த காம தளத்தில் கதை எழுதிட ஆசை இருந்தது

ஆனால் முழுக்க முழுக்க காம கதைகளாக மட்டுமே எழுதுகிறார்கள் நாம் காதல் கதை எழுதி என்ன பயன் என்று யோசித்தேன்

இருந்தாலும் முயற்சி செய்வோம் என்று கூறி

திருமணம் ஆகாத முதிர் கன்னிகள் மற்றும் 90 kids மனதை மயக்கும் அளவில் ஒரு கதையை பாகங்களாக பிரித்து எழுதிட முடிவு செய்தேன்

அப்படி அந்த கதையின் நாயகனாக எனது நண்பனின் கேரக்டரை சொடுக்கி அவனின் சுறுசுறுப்பு மற்றும் அவனின் காமெடி சென்ஸ் அவனின் யதார்த்தமான பேச்சு நடைமுறை வாழ்க்கையை திணித்து

அந்த நாயகன் கேரக்டர் மீது பெண்களுக்கு ஆர்வம் உருவாக வேண்டும் என்ற நோக்கத்தோடு

செம்ம டச்சிங்குடன் கதைகளை எழுத ஆரம்பித்தேன்

அதில் நான் Fake mail id ஒன்றை பதிவு செய்து பெண்கள் கருத்துக்கள் என்று கதைகளை எழுதி வந்தேன்

மூன்று பாகம் வரை ஒரு முயற்சியும் பலிக்கவில்லை

எனக்கே மனம் சோர்ந்தது

காரணம் காம தளத்தில் கிராமத்து காதல் கதை எப்படி வெல்லும் என்று நான் சோர்ந்து போனேன்

நான்காவது பாகத்தில் என் நண்பன் கேரக்டருக்கு கொஞ்சம் செக்ஸியான பேச்சு கிண்டல் என்று சேர்க்க

ஐந்தாவது பாகமும் கலவையாக கலந்து எழுத

ஒரு நாள் பல ஆண்களும் பெண்களும் கதையை நன்றாக இருக்கிறது என்று மெசேஜ் செய்ய எனக்கு நம்பிக்கை வர ஆரம்பித்தது

ஆறாவது பாகத்தில் நண்பன் கேரக்டருக்கு உரிய ஒரு பெண் கேரக்டரையும் அது நான் நினைக்கும் பெண்கள் மனதை தொட வேண்டும் என்று அதற்கு தகுந்தாற் போல சில விஷயங்களை கொஞ்சம் செக்ஸியாக எழுதினேன்

நாளுக்கு நாள் அந்த கதையின் ரசிகர்கள் அதிகம் ஆகினர்

அதில் நிறைய பெண்கள் செக்ஸ் Chat செய்ய மட்டுமே விருப்பமாக இருப்பது புரிந்தது

அந்த பெண்களை block செய்தேன்

பிறகு கதையில் நண்பனின் கேரக்டரை கொஞ்சம் அப்பாவியாக காட்டி அவன் உண்மை மனதிற்கு நடக்கும் சோதனைகளை கதையில் சேர்த்தேன்

ஒன்பதாவது பாகம் வரை கலவையாக கொண்டு சென்றேன்

அப்போது தான் ஒரு பெண் மெசேஜ் செய்தால் அந்த கதையின் நாயகன் கேரக்டர் தனக்கு மிகவும் பிடித்துள்ளது

என்று மெசேஜ் செய்தாள்

நான் கதை படித்தீர்களா என்று கேட்டேன்

அவளோ இல்லை எனக்கு என் தோழி இந்த கதை லிங்கை அனுப்பி

உன் வாழ்க்கையை போலவே இருக்குடி என்று கூறினாள்

அதை தான் படித்து பார்த்தேன்

எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது என்று மெசேஜ் செய்தாள்

எனக்கும் மேரேஜ் இன்னும் ஆகலை

அதனால் ஏகப்பட்ட அசிங்கமான பேச்சுக்களால் அவதிப்பட்டு விட்டேன் என்றாள்

நான் அந்த பெண்ணிடம்

நான் ஒரு ஊரில் விசிட் செய்த போது அங்கே நடந்த ஒருவரின் கதையை தான் எழுதி வருகிறேன் என்றேன்

அவளோ அப்போ அந்த கேரக்டர் உண்மைதானா என்று கேட்டாள்

நான் ஆமாங்க என்றேன்

அவருக்கு இப்போ மேரேஜ் ஆகிடுச்சா சார் என்று கேட்டாள்

நான் இல்லைங்க என்றேன்

அவரது தொடர்பு எண் இருக்கிறதாங்க சார் என்றாள்

நானும் இருங்க தர்றேன்

ஆனால்,,,?

நீங்கள் இந்த கதை பற்றி அவரிடம் பேசவே கூடாது அப்படி தான் பேச வேண்டும் என்றேன்

அதே நேரத்தில் புரோக்கர் மூலம் பார்த்ததாக நீங்கள் சொல்ல வேண்டும்

அவருடைய நண்பர் ஒருவர் இருக்கிறார் அவரின் நம்பரும் உங்களுக்கு அனுப்புகிறேன்

அவர் மூலம் நீங்கள் அறிமுகமாகுங்கள் என்றேன்

அவளும் சரி என்றாள் நல்ல புரிதல் கொண்ட பெண் போல

நான் என் நம்பரையும் என் நண்பன் நம்பரையும் கொடுத்து

கதாசிரியர் என்ற போர்வையில் நடந்து கொண்டேன்

அந்த பெண்ணின் மெயில் ஐடிக்கு நான் நம்பர் அனுப்பிய ஒரு அரை மணி நேரம் கழித்து எனது நம்பருக்கு ஒரு போன் வந்தது

நான் அட்டன் செய்து ஹலோ என்றேன்

என் பெயர் ரத்னாதேவி பேசுறேன் சார் என்றாள்

நான் உடனே அடடே இப்பதான் அந்த டைரக்டர் கூப்பிட்டு சொன்னார் நீங்க கூப்பிடுவீங்கனு என்றேன்

அவளோ ஓ அவரு டைரக்டர் ங்களா என்றாள்

ஆமாங்க அவரு ஒரு கதை லொக்கேஷன் பார்க்க வந்திருந்தார் அப்போ அவருக்கு நான்தான் தங்க இடம் கொடுத்து அவரு கிளம்பும் வரை உதவி செய்தேன் என்றேன்

அவளோ ஓ அப்படிங்களா

உங்க நண்பர் பத்தி அவரு என்கிட்ட சொன்னார்

அவரு எனக்கு என் தோழி மூலம் பழக்கம் ஆனால் அவரு டைரக்டர் னு தெரியாதுங்க என்றாள்

எனக்கு அவள் உண்மைதன்மை பிடித்து இருந்தது

சரிங்க உங்களுக்கு என் நண்பனை கல்யாணம் செய்துக்க விருப்பமா என்று கேட்டேன்

அந்த பெண்ணோ

ஆமாங்க அவரு மேல் எனக்கு ஒரு விருப்பம் வந்திருச்சு

எப்படியாச்சும் அவரோடு நான் வாழ ஆசை என்றாள்

எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது

சரிங்க இனி நானே உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்குறேன் என்றேன்

அவளிடம் நான் சில விஷயங்களை கேட்டேன் அவள் சொன்னது எனக்கு ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சியையும் கொடுத்தது

தொடரும் ,,,,?

selfishman1989@gmail.com

862700cookie-checkநண்பனுக்காக,,,,?!!!?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *