தேர்வு எழுத மதராஸ் நோக்கி ~1

Posted on

சனிக்கிழமை தேர்வு எழுதுவதற்கு திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கும் சென்றேன்.ஏனென்றால் சொந்த ஏரியாவில் தேர்வு எழுதினாள் தெரிந்த நபர்கள், உற்றார் உறவினர்கள் எல்லாரும் இன்னுமா படிச்சிட்டு இருக்க என்று ஏராளமாக பேசுவார்கள் அந்த வார்த்தைக்கு வலிகள் மிகுதி .அந்த வலிகளை மறக்க எனது வெற்றியால் மட்டுமே அவர்களுக்கு தகுந்த பதிலடி தர முடியும்.
அந்த கோபத்தில் தான் சென்னைக்கும் சென்டர் போட்டேன்.
நான் தேர்வு மையத்தில் சென்றடைந்தேன். அங்கே எல்லாரும் பரபரப்பாக படித்தார்கள். ஒரு பெண் மட்டும் மேலே மரத்தை கூர்ந்து கவனித்தால்.எனது பார்வை அவள் மீது விழுந்தது அவள் என்னடா அப்படி பார்க்கிறாள் என்று நானும் மேலே பார்த்தேன் .ஒரு தாய் கிளி அதன் குஞ்சுக்கு இறையை பரிமாறியது.
நானும் அதனை ரசித்து விட்டு அவளையும் ரசிக்க வேண்டும் என்று எனது உள்ளம் கேட்டது.
உள்ளத்தை உள்ளபடி உனர்வது தானே எனது குணம் அதனால் அவள் மீது எனது விழி பாய்ந்தது.
முதலில் அவள் பாதங்களில் அனிந்த செருப்பை ரசித்து எனது விழிகள் மெல்ல கொலுசு மணிகளையும் விரல் நகங்களில் தீட்டிய வண்ணங்களையும் கூர்ந்து கவனித்தது. அவளது ஆடையை கவனித்தேன் அப்புறம் அவளது கையில் அனிந்திருந்த வாட்ச் விரல்களில் ஓரு மோதிரம் அவளின் கைவிரல்கள் கூந்தலை ஒதுக்க அப்போது அவளது விழியையும் முகத்தையும் கண்டேன்.
எனது இதயம் வேகமாக துடித்தது.
கருமை நிறத்தில் இருந்தாலும் அவளின் மூக்குத்தி அவளின் அழகை மெருக்கேற்றியது. அந்த காற்றில் அவளது சுருள் கூந்தல் பறக்கும் போது அவள் விழிகளை உருட்டி சிமிட்டி செவியோரம் கோரும் அழகால் நான் மெய் மறந்து ரசிக்க எனது இதழ்கள் வெட்கத்தில் சிரித்தது.
இது தான் காதலா என்று இதயம் துடித்தது.
நான் கொஞ்சம் நேரம் நல்லா இருந்தால் அந்த நியதிக்கு பொறுக்காது.அதற்குள் எனது கனவு கலைந்தது எல்லாரும் தேர்வு அறைக்கு சென்று விட்டார்கள்.
நானும் எனது கால் டிக்கெட்டு நம்பர் பார்த்திட்டு எனது தேர்வு அறைக்குள் சென்றேன் உள்ளே நுழைந்ததும் அவளை தான் பார்த்தேன் அதுவும் எனது பக்கத்தில்
உள்ளத்தில் சாரி இறைவா உன்னை தீட்டி விட்டேன் என்று இறைவனிடம் மன்னிப்பு கேட்டு நன்றி கூறி அவள் பக்கத்தில் அமர்ந்தேன்.
அவளை கவனிக்க அவளது பாதங்கள் தடுமாறியது.மேசையில் இருந்த கைகள் விரல்களை பின்னி பினைந்தது.
நான் அவளிடம் என்னாச்சு என்று செய்கையில் கேட்க.
அவள் ஒன்றும் இல்லை என்று தலையசைத்தாள்.
தேர்வு தொடங்குவதற்கு இன்னும் அரைமணி நேரம் இருந்தது.
நான் மெல்ல அவளிடம் கண்களை மூடி மூச்சு இழுத்து விடுங்க எதுவும் சிந்திக்காதிங்க இந்த எக்சாம் நல்லா பன்னலாம் என்றேன்.
அவள் மெல்ல புன்னகைத்து சரியென்று கூறி கொஞ்சம் நேரம் கண்களை மூடி அமர்ந்தாள்.
நான் அவளை பார்த்துக்கொண்டு இருக்க இரண்டு நிமிடம் கழித்து கண்விழித்தாள் என்னை பார்த்து சிரித்தாள்.
நான் இப்போது ஓகேவா.
அவள்: ஹீம் என்று பெருவிரலை காட்டினாள்.
அதன் பின்பு தேர்வு தொடங்கியது நான் அவ்வப்போது அவளை சைட் அடித்தேன் ஒரு வழியாக நல்லபடியாக எழுதி முடித்தேன் கடைசி ஐந்து நிமிடம் இருந்தது அவளை கவனித்தேன் பரபரப்பாக எழுதினாள் சரி அவள் எழுதட்டும் அப்புறம் பார்க்கலாம் என்று நான் எனது வேலையை பார்த்தேன் தேர்வு நேரமும் முடிந்தது .
நான் அவளிடம் எப்படி பன்னிங்க ?
அவள்: நல்ல பன்ன .நீங்க ?
நான் பரவாயில்லை.
அவள் என்னை பற்றி கேட்க நானும் கூற நான் அவளை பற்றி கேட்டேன்
அவள்: எனக்கு கனவர் இல்லை விதவை தான் ஒரு குழந்தை இருக்கு.
நான் மௌனமாக இருந்தேன்.
அவள்: ஹே நான் அந்த கனங்களில் இருந்து கடந்து வந்து பலவருடம் இருக்கும் நீங்க அதை நினைக்க வேண்டாம்.
நான்: புன்னகைத்து சரி என்றேன் வாங்க சாப்பிட்டு போகலாம் என்று கேட்டேன்.
அவள் தயங்கினாள்
நான்: நீங்க வாங்கி தர வேண்டாம்பா நான் வாங்கி தாரேன். நீங்க வேலை கிடைத்தது சிறப்பாக கவனிங்க அது போதும்.
அவள் சிரித்துக்கொண்டே சரி என்றால்.
அவள்: இருங்க எனது பைக் எடுத்திட்டு வாரேன் நீங்கே இங்கே நில்லுங்க என்றாள்.
நான் சரி எடுத்திட்டு வாங்க
அப்போது எனது மனதில் அவள் மீது மோகம் தோன்றவில்லை அது ஏன் என்று எனக்கும் புரியவில்லை .அவள் மீது வேறொரு ஈர்ப்பு என்னுள் எழுந்தது.
இது நிலைக்குமா ? இது தொடருமா ! என்று எனக்கு‌ விளங்கவில்லை.
அவளும் பைக்கில் வந்தால் நான் பின் கம்பியை இரு கைகளால் இறுக்கமாக பிடித்து வந்தேன்.
காற்றில் அவளது கூந்தல் எனது முகத்தில் பட்டொளி வீச அதோடு அவளது உடலின் பாகங்கள் வாசனை இழுத்தது அது வேர்வை வாடையா அல்லது பெர்ஃப்யூம் வாசனையா தெரியலை.
அனைத்து உணர்வுகளையும் உள்ளுக்குள் வைத்து சென்றேன் ஒரு வழியாக ஹோட்டல் வந்தது இருவரும் சாப்பிட்டோம் அவள் மெதுவாக சாப்பிட்டால் நான் அதுவரை பொறுமையாக உட்கார்ந்து இருந்தேன்.
நான்: மெதுவா சாப்பிடுங்க ஒன்றும் அவசரம் இல்லை.
அவள் சிரித்துக்கொண்டே சரியென்று சாப்பிட்டு முடித்தாள்.
இருவரும் கைகளை கழுவ அவளது செருப்பு வார் கழன்று இருந்தது நான் குனிந்து அதை மாட்டிவிட்டேன்.
அவள்: கண்கலங்க thanks என்று சொன்னால்.
நான்: என்னை ரயில்வே ஸ்டேஷன்ல இறக்கி விடுங்க
அவள்: உங்களுக்கு டிரைன் எப்போது.
நான்: எனக்கு நைட்டு தான் அப்படியே மெரினா கடற்கரை சுற்றிபார்த்துட்டு எக்மோர்ல இருந்து ஏறுவேன்.
அவள்: அப்படினா என் வீடு பக்கம் தான் வந்துட்டு போங்க.
நான்: அட வேணாம்பா நீங்க கூப்பிட்டது ரொம்ப சந்தோஷம்.
அவள்: வாங்க பரவாயில்லை
நான் சரியென்று அவளோடு மீண்டும் ஒரு பயணத்தை நோக்கி அவளது வீட்டிற்கு சென்றேன்.
அவளது அம்மா அப்பா யாரென்று கேட்க அவள் சொன்னாள்.
அவர்கள் இருவரும் சிரித்த முகத்தோடு என்னை வரவேற்க நானும் உள்ளே சென்றேன்.
அவள் உள்ளே சென்றால்.
அப்பா நலம் விசாரிக்க என்னை பற்றி கூறினேன்.
அவர் : இதுவரைக்கும் என் பொண்ணு எந்த ஆண் வீட்டுக்கு கூப்பிட்டு வந்தது இல்லை இது தான் முதல்முறை.
அவளது வாழ்க்கை பாதிலே முடிந்தது.
அவள் அதிலிருந்து உடைந்து விட்டால் யாரிடமும் பேசுவது இல்லை. குழந்தை அப்புறம் படிப்பு அவ்வளவு தான்
அவர் சொல்வதை கேட்டு எனக்கும் விழிகளில் நீர் கசிந்தது.
அவள் என் மேல் வைத்த நம்பிக்கையை சிதறவிட கூடாது என்று நினைத்தேன்.
அவளும் உள்ளே இருந்து வந்தால் காபி கொடுத்தாள் இருவரும் காபி குடித்தோம்.
நான் சரி அப்படியே கிளம்புகிறேன் உங்கள் குழந்தையை பார்க்கலாமா கேட்டேன்.
அவள் தூங்குறா என்றால். நான் உள்ளே சென்று அந்த ஏஞ்சல் தலையை வருடி கோரி இரண்டு நிமிடம் மௌனமாக குழந்தையை கவனித்து அங்கிருந்து கிளம்பினேன்.
அவள்: எங்கே மெரினாவுக்கா
நான்: ஆமா என்றேன்.
அப்பா: அப்படினா நீயும் கூட போயிட்டு வா ..நாங்கள் பாப்பா பார்த்துக் கொள்கிறோம்.
அவள் இருங்க டிரஸ் மாத்திட்டு வாரேன் என்று உள்ளே சென்றார்.
அப்பா: மெதுவாக எனது பக்கத்தில் வந்தார்.
தம்பி சரக்கு அடிப்பியா வா ஒரு கட்டிங் போடும் என்று கேட்டார்.
நான் சிரித்துக்கொண்டே எனக்கு அந்த பழக்கம் இல்லை நீங்க அடிங்க.
அவர் : சும்மா தான் கேட்டேன் என்று சிரித்தார் .
அம்மா எனது பக்கத்தில் வந்து எனது சட்டை பையில் 500 நோட்டு தினித்து விட்டார்கள்.
நான் சிரித்துக்கொண்டே என்ன கவனிப்பு பயங்கரமா இருக்கு என்று கேட்டேன்.
அதற்கு அம்மா அப்பா இருவரும் இது என்ன கவனிப்பு அவள் மனது மாறினால் இதை விட பயங்கரமாக இருக்கும் என்று சிரித்தார்கள்.
அவளும் ரெடிஆகி வந்தால்.
இருவரும் வங்கை கடலோரம் மனதில் கனங்களை உப்பு காற்றோடு கதைக்க சென்றோம்.
அங்கே ஒரு காதல் பிறந்து மோகம் தோன்றி வல்லினமும் மெல்லினமும் இனைந்து இடையில் வெண்பா வெளிச்சத்தில் ஒரு காப்பியம் தோன்றியது.
இருவரும் அதன்பின் நினைத்த மாதிரி தொலைந்த வாழ்க்கைக்கு உயிர் கொடுத்து வாழ துவங்கினோம்.
கதை படிக்கும் பெண்பேதைகள் நல்லா இருந்தா marratamil@gmail.com
mail or google chat ல உங்கள் சிந்தனைகளை சிதறாமல் கூறலாம் நீங்கள் சொல்லும் வார்த்தையால் தான் அடுத்த பதிவை நகர்த்துவேன்.
எனது மனதின் கற்பனைகள் ஏராளம் அதை பூர்த்தி செய்ய உறவு இல்லாமல் உங்களிடம் பகிருகிறேன் மன்னிக்கவும்.
இது கற்பனை எண்ணங்கள் தான்..

836040cookie-checkதேர்வு எழுத மதராஸ் நோக்கி ~1

1 comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *