யாழினி Please
என்ன நடக்குது உன் வாழ்க்கையில்
ஒன்னுமே புரியல ,,,
யாழினி ரோகினி நான்
எப்படி உன் வாழ்க்கையில் நான் அந்த கொடூரத்தை செய்ய துணிந்தேன்
கிராமத்தில் இருந்து
பள்ளி வாழ்க்கையில்
யாழினியும் நானும் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு பேருந்தில் பயணம் செய்யும் போது அவள் மீது எனக்கு உருவான காதல்
அவளுக்கு வசதிகள் இருந்தும் அவள் பேருந்தில் பயணம் செய்வதை விரும்பி வந்த தேவதை
என்னோடு அவள் பேசும் போதெல்லாம் எனக்கு அவளின் பேச்சு எனக்கு காதலை மட்டுமே எண்ணத்தில் கொண்டு பேச தோன்றியது
அவளுக்கு என்னை ஒரு நல்ல நண்பனாக பார்க்க தோன்றியிருக்கலாம்
ஆனால் என் மனது என்னை அப்படி அவளை அணுக முடியவில்லை
நாள்பட நாள்பட அவளது அழகும் கூட
என்னிடம் மட்டுமே உரிமையாக பேசுவதை பார்த்து என் நண்பர்களே என்னிடம் அவள் உன்னை லவ் பண்றாளா என்பார்கள்
நான் ஆமாம் என்று சொல்லி வந்தேன்
ஒரு நாள் யாழினி என்னிடம் வருண் நான் உன்னை லவ் பண்றேன்னு உன் ப்ரண்ட்ஸ் கிட்ட சொன்னியா என்று கேட்க நான் ஆமாம் என்று கூறினேன்
அவளோ ஏன்டா அப்படி சொன்ன என்று கேட்டாள்
நான் அப்படி சொல்லலைனா உன்னை சுத்தி சுத்தி வருவாங்க யாழினி அது எனக்கு பிடிக்கல அதான் அப்படி கேட்டதும் நான் ஆமாம் னு சொல்லிட்டேன்
அவளோ அதுவும் சரிதான் வருண் என்றாள் யாழினி
இப்படி பள்ளி வாழ்க்கை முடிய
கல்லூரி வாழ்க்கை ஆரம்பித்தது
யாழினி இன்ஜினியரிங் காலேஜில் சேர்ந்து
காலேஜ் பஸ்ஸில் சென்று வர ஆரம்பமானதும்
நான் ஆர்ட்ஸ் காலேஜில் சேர்ந்து பஸ்ஸில் தினமும் சென்று வர ஆரம்பம் ஆனது
தினமும் காலை மட்டும் அவள் காலேஜ் பஸ் வரும்வரை என்னோடு பேசிக்கொண்டு இருப்பாள்
அவள் சென்ற பஸ் வந்து பத்து நிமிடங்களில் நான் செல்லும் பஸ் வந்ததும் நான் செல்வது வழக்கமாக வைத்திருந்தோம்
மாலையில் அவளது நேரமும் எனது நேரமும் ஒத்து சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது
தினமும் காலை நேரங்களில் பஸ் ஸ்டாப்பில் நின்று பேசும் போது
ஏன்டா நீயும் என் கூடவே இன்ஜினியரிங் காலேஜ் ல சேர்ந்திருக்கலாம் ல என்பாள்
தனியா போக போர் அடிக்குது டா வருண் என்பாள்
நான் அவளை ரசிப்பது மட்டுமே வேலையாக வைத்திருப்பேன்
அவள் ஏன்டா இத்தனை பேசுறேன் நீ மட்டும் ஒரு வார்த்தை இரு வார்த்தை மட்டும் பேசுற என்பாள்
நானும் ஒன்னுமில்லை யாழினி என்பேன்
இப்படியே காலம் செல்ல செல்ல
ஒரு நாள் காலை வேளையில் சந்திப்பு நேரத்தில் அவள் அமைதியாக இருந்தாள் நான் பேச ஆரம்பித்தேன்
என்ன யாழு தொனந்தொனனு பேசிட்டே இருப்ப இப்ப எதுவும் பேசாம அமைதியாக இருக்க என்று கேட்டேன்
அவளோ இல்லை டா காலேஜ் ல சீனியர் ஒருத்தர் என்கிட்ட love proposal பண்ணிட்டாரு
அதான் என்ன பதில் சொல்றதுனு தெரியல என்றாள்
நான் யாழு முதலில் படிக்கும் வேலையை மட்டும் பார்க்க சொல்
படிப்பை முடிச்சுட்டு வேலை கிடைச்சதுக்கு அப்புறம் லவ் சொல்ல வரச்சொல்லிடு
என்று கூற அவளும் நானும் அதைத்தான் சொல்லலாம்னு இருந்தேன் டா வருண் என்றாள்
எனக்கும் அப்போது வரை அரக்கத்தனமான காதல் அவள் மீது அழுத்தமானதாக இல்லை
இப்படியே கல்லூரி காலம் முடியும் வரை யாழினி யாரையாவது காதலிக்கிறாளா என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்பேன்
கல்லூரி வாழ்க்கை முடிந்தது
நானும் எனக்கு உள்ள திறமைக்கு ஏற்ற வேலையில் ஈடுபட
அவள் அவளது திறமைக்கு ஏற்ற வேலையில் சேர
இப்போது எங்களுக்கு சந்திக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது
நானும் வெளி மாநிலங்களுக்கு அடிக்கடி செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்ததால்
அவளை பார்க்க வாய்ப்பு இல்லை
போன் தொடர்பு மட்டுமே வாட்ஸ்அப் அப்பப்ப போனில் பேசுவது என்று மட்டுமே தொடர்ந்தது
ஒரு வருடத்தில்
அவளுக்கு வேலை மாற்றம் பெங்களூரில் தங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஆதலால் அவள் பெங்களூர் செல்வதை போன் செய்து கூறினாள்
நான் அப்போதுதான் புரிந்து கொண்டேன்
அவளை விட்டு நான் விலகி கொண்டு இருக்கிறேன் என்று
ஒரு வருடமாக அவளை பார்க்காமல் இருந்ததே பெரிய விஷயம்
இதில் இவள் பெங்களூர் வேற போறேங்குறா இப்பவே ஒரு வருடத்தில் அவள் எப்படி இருப்பாள்னு அவளை பார்க்க ஆசையாக இருக்கு
இவள் பெங்களூர் போய்ட்டா நான் எப்படி இவளை பார்ப்பது என்று மனதுக்குள் வருத்தப்பட்டேன்
டேய் வருண் லைன்ல இருக்கியா
நான் பெங்களூர் போறேன் டா
அஞ்சு வருஷம் கான்ட்ராக்ட் டா அப்பப்ப UK போகனும்னு சொல்றாங்க டா என்றாள்
நான் அவள் கிட்ட போய்டு வா யாழு நல்ல வேலை தானே வாய்ப்பு இருக்கும் போது பயன்படுத்தி முன்னேறு என்று கூற
அவள் சரிடா நான் பெங்களூர் போனதும் என்னை மறந்துடாதே
இப்பவே நீயும் நானும் நேரில் மீட் பண்ணி ஒரு வருஷம் ஆச்சு உனக்கு ஞாபகம் இருக்கா என்று கேட்டாள்
நானும் ம்ம் இருக்கு சரி பார்த்து போய்ட்டு போன் பண்ணு என்றேன்
சரிடா வருண் உன்னை நேரில் பார்த்துட்டு போலாம்னு தோணுது டா வர முடியுமா என்று கேட்டாள்
நான் இல்ல இப்ப நான் கேரளாவுல இருக்கேன் பா இரண்டு நாள் ஆகும்
சரி நீ முதலில் பெங்களூர் போ நான் அடுத்த மாசத்துல பெங்களூர் வர வேண்டிய வேலை இருக்கு வரும் போது சந்திக்கலாம் என்றேன்
அவளும் சரிடா வந்துட்டு என்னை பாக்காம போய்டாதே என்றாள்
நானும் சரி யாழு என்று கூறிவிட்டு போனை கட் செய்து விட்டு அப்போதைக்கு சரி பெங்களூர்ல தானே இருக்கா பாத்துக்கலாம் என்று அமைதியாக இருந்துவிட்டேன்
பெங்களூர் செல்லும் வேலையும் வேறு நபருக்கு ஒதுக்கப்பட அவளை பார்க்க முடியாமல் போனது நினைத்து
அவளிடம் கூறினேன் அவளோ சரிடா நீயும் நானும் சந்திக்கவே லீவு போட்டு வந்தால்தான் பாக்க முடியும் போல என்று அவள் கூற நானும் அவளும் சிரித்துக்கொண்டோம்
இப்படியே வாழ்க்கை நகர நகர
அவ்வப்போது போனில் நலம் விசாரித்துக் கொள்வோம்
அவளை பற்றி நான் கவலைப்படவில்லை
அவள் என்னுள் இருக்கிறாள்
என்னுடன் பேசுகிறாள் என்று அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை
இப்படியே மூன்று வருடங்கள் கடந்தது
எங்களுக்குள் இருந்த நட்பை அவள் எப்படி நினைக்கிறாள் என்று எனக்கு தெரியவில்லை
ஆனால் நான் அவளை நட்பு தோழியாக காதலியாக என எல்லாமுமாக நினைத்து கொண்டு வாழ்வதை
உணர வேண்டிய தருணம் வந்தது
அவளும் காதல் என்று யார் பெயரையும் என்னிடம் கூறியதில்லை
ஒரு நாள் யாழினி போன் செய்ய
சொல்லு யாழு என்றேன்
டேய் வருண் எனக்கு Marriage முடிவு பண்ணிட்டாங்கடா
அப்பா அம்மா இப்பதான் போன் பண்ணினாங்க
மாப்பிளை ஆஸ்திரேலியாவுல வேலை செய்யுறாராம்
Marriage முடிஞ்சதும் அவர் கூடவே போக ஏற்பாடு பண்றாங்க டா என்றாள்
எனக்கு காதில் கிர்ரென்று ஒரு சத்தம்
எதுவும் பேச முடியல
அவளிடம் நீ என்ன சொன்ன என்று கேட்டேன்
அவள் நான் என்னடா சொல்றது அப்பா அம்மா முடிவு பண்ணிட்டாங்க இனி நான் சொல்ல என்ன இருக்கு என்று கேட்டாள்
அப்ப சரி உன் இஷ்டம் யாழு என்று கூற
அவள் சரிடா உன் கிட்ட தான் முதலில் சொல்லியிருக்கேன்
நான் கூட வொர்க் பண்ற ப்ரண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டு ஈவ்னிங் போன் பண்றேன் என்று கூறிவிட்டு போனை கட் செய்து விட்டாள்
நான் அவள் சொன்ன வார்த்தைகளை கேட்டு கேட்டு
எனக்குள் நானே அப்ப யாழினி எனக்கு இல்லையா என்று மன விரக்தியில் நொந்து போக ஆரம்பித்தேன்
அவளை நான் இவ்வளவு நாளும் என்னவள் என்று அல்லவா இருந்து விட்டேன்
இப்போது அவள் வேறு ஒருவருக்கு சொந்தமாகிறாளா என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை
யாழினிக்கு என் மேல் அப்ப காதலே இது வரை வரவில்லையே
என்று என் மனம் மிகவும் மன்றாடியது
வேலை செய்ய பிடிக்கவில்லை
கிளம்பினேன் பிரைவேட் பார் சென்று அவள் சொன்ன விஷயங்களை நினைத்து நினைத்து மனம் நொந்து
பக்காடி லெமன் வாங்கி லார்ஜ் லார்ஜ்ஜாக அடிக்க ஆரம்பித்தேன்
கிங்ஸ் சிகரெட் வாங்கி இழுத்து இழுத்து புகை விட்டு எனது மனநிலைக்கு என்ன தீர்வை கொடுப்பது என்று வழி தெரியாமல் புலம்பினேன்
யாழினியிடம் என் உணர்வுகளை சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்
அவள் போன் மேல் போன் செய்து கொண்டு இருந்தாள்
என்னால் அவளிடம் பேச முடியலை
கட் செய்து விட்டு விட்டேன்
இப்படியே பல முறை கட் செய்து விட்டேன்
அவள் போன் செய்ய செய்ய எனக்கு அவளின் பிரிவு எண்ணம் மேலோங்கியது
ஒரு நாள் எனது நணபன் போன் செய்ய
நான் நிம்மதி இல்லாமல் சரக்கை அடித்துக் கொண்டு இருந்தேன்
அப்போது அவனின் போனை யதார்த்தமாக அட்டன் செய்து
அவனிடம் சொல்லுடா என்றேன்
அவன் எங்கேடா இருக்க மச்சி என்க
நான் பார்ல இருக்கேன் ஏன் போன் பண்ணுன என்று கேட்டேன்
அவனோ ஒன்னும் இல்லைடா உன்கிட்ட பேசனும் என்று சொல்ல
நான் இப்போது நான் யார்கிட்டயும் பேச முடியாது டா
தப்பா நினைச்சுக்காதே என்று சொல்லிட்டு கட் செய்து விட்டேன்
சிறிது நேரத்தில் யாழினி போன் செய்தாள்
நான் அப்போது அட்டன் செய்து சொல்லு யாழு என்றேன்
அவளோ ஏன்டா எத்தனை தடவை போன் செய்து விட்டேன் ஏன்டா எடுக்க மாட்டேங்குற என்றாள்
நான் கொஞ்சம் வேலை இருக்கு யாழு நான் அப்புறம் பேசட்டுமா என்று கேட்க
அவளோ நீ இப்போது எல்லாம் பண்றது எல்லாம் சரி இல்லடா என்றாள்
நான் ஆமாம் நான் சரியில்லை வை போனை என்று டென்ஷனில்
கட் செய்து விட்டதாக நினைத்து கட் செய்யாமல் விட்டு விட்டேன்
இது புரிய ரொம்ப நாள் ஆனது
அதன் பிறகு நான் சரக்கு அடித்து விட்டு என் மனதில் யாழினி மீது உள்ள கோவத்தை வெளிப்படையாக பேசி அவளை நான் எவ்வளவு தூரம் நேசித்து அவளுக்காக காத்திருந்தேன் என்று அழுது புலம்பிக் கொண்டு இருந்தேன்
நான் அப்படி எல்லாம் புலம்பியது பற்றி
அது எதுவும் எனக்கு அப்போது தெரியவில்லை
மூன்று நாட்கள் வரை யாழினியிடம் இருந்து எந்த போனும் வரவில்லை
எனக்கு எதுவும் புரியவில்லை
மூன்று நாட்கள் கழித்து யாழினி போன் செய்தாள்
நான் அட்டன் செய்து சொல்லு யாழு என்றேன்
அவள் நீ இப்போ எங்கடா இருக்க என்று கேட்டாள்
நான் வீட்டுல என்றேன்
அவள் ஏன் வேலைக்கு போறதில்லையா என்று கேட்டாள்
நான் இல்லை உடம்புக்கு முடியல அதான் என்றேன்
யாழினி சரிடா என் கல்யாணம் உறுதி ஆகிடுச்சு
அதான் பெங்களூர்ல ஒரு ஃப்ரெண்ட்ஸ் பார்ட்டி வெச்சிருக்கேன் நீ வந்தே ஆகனும் என்றாள்
நான் இல்லை யாழு எனக்கு கொஞ்ச ஹெவி வொர்க் அதனால் வரமுடியாது
நான் பிறகு வர்றேன் என்றேன்
யாழினியோ இல்லை டா நீ கண்டிப்பாக வந்தே ஆகனும் என்றாள்
எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல
அவள் கிட்ட யாழு நீ சந்தோசமா இரு அது போதும்
என்னை வற்புறுத்தாதே என்று கேட்டேன்
அவளோ நீ இல்லாம எனக்கு கல்யாணம் இல்லடா என்றாள்
எனக்கு அது மிகவும் கோபத்தை கொடுத்தது
ஆனால் அவள் என்னை அப்படி நம்புறாள்
என்று பெருமையாக இருந்தது
யாழினி சொன்னா கேளு
நான் கொஞ்சம் பிஸி புரியுதா என்றேன்
அவளோ நீ என்ன பிஸினு எனக்கு தெரியும் டா
ஒழுக்கமா நான் சொல்லுற தேதியில் எனக்காக நீ வர்ற அவ்வளவுதான்
இல்லேன்னா நான் கல்யாணமே பண்ண மாட்டேன் என்று பேசினாள்
எனக்கு அவள் அப்படி சொன்னதும் செம்ம கோவமானது அவள் மேல்
நான் பிஸி யாழு நான் வருவது சிரமம் என்று கூற
அவள் நீ வந்தே ஆகனும் டா இல்லேன்னா நான் இனிமேல் போன் கூட பண்ண மாட்டேன் என்று கூறிவிட்டு போனை கட் செய்து விட்டாள்
எனக்கு மனம் வெறுமையாக தெரிந்தது
ஏன் என்னை இவ்வளவு தூரம் இம்சை செய்கிறாள் இவள்
அவளது அந்தஸ்து பற்றி நான் பலமுறை யோசித்து விட்டு தான் அவளிடம் இருந்து விலகி செல்ல நினைக்கிறேன்
ஆனால் அவள் என்னை இவ்வளவு தூரம் என்னை வற்புறுத்தி வர சொல்கிறாள்
என்று அரை போதையில் மேலும் போதையை ஏற்றி தூங்கி விட்டேன்
அடுத்த நாள் காலை எழுந்தவுடன் எனக்கும் முந்திய நாள் நடந்த நிகழ்வுகள் அரைகுறை ஞாபகம் மட்டுமே இருந்தது
யாழினி போனில் பேசியது மட்டும் நினைவில் தோன்றி தோன்றி வந்தது
அவளை மறக்க முடியாத நினைவுகள் என்னை வாட்டி எடுக்கிறது
நான் என்னதான் செய்வது
என்று குழப்பம் மேலோங்கி இருந்தது
மீண்டும் அவள் போன் செய்தாள்
நான் அட்டன் பண்ணியதும்
டேய் வருண் இவ்வளவு தானா டா நீ
நான் இவ்வளவு சொல்லுறேன் நீ கொஞ்சம் கூட ரெஸ்பான்ஸ் பண்ணி பேச மாட்டேங்குற என்று கேட்டாள்
நான் சரி யாழு நான் வர்றேன் ஓகேவா என்று கூற
நேர்ல வா உன்னை பேசிக்குறேன் என்று திட்டிய படி இரண்டு நாள் தங்குற மாதிரி வாடா
வந்த உடனே கிளம்புறேன்னு சொல்லி கடுப்பு ஏத்துன கொன்னுடுவேன் என்றாள்
நான் சரி யாழு என்றேன்
அவள் சொன்ன தேதி வரை முக்கியமான வேலைகளை முடித்து விட்டு
எப்படியும் அங்கே போனால் அவளை பார்த்து பார்த்து ஏங்கி நொந்து போக தோணும் அதனால்
தனியாக ரூம் எடுத்து மேலும் ரெண்டு நாள் அவளுக்கு தெரியாமல் பெங்களூர்ல இருந்துட்டு வந்துடுவோம்னு முடிவு செய்து வைத்து இருந்தேன்
அவள் சொன்ன தேதியும் நெருங்கியது
ஒரு நாள் முன்னமே வரச் சொல்லி இருந்தாள்
எனக்கு பைக் ஓட்டுவது பிடிக்கும் என்பதால்
அவளை காண பைக்ல யே லாங் ட்ரைவ் பண்ணலாம் னு முடிவு செய்து
பைக்கை தயார் செய்து தேவையான உடைமைகளை எடுத்துக் கொண்டு
அவள் இப்போது எவ்வளவு அழகாக இருப்பாள் என்று ஆர்வமாக அவளை காண பெங்களூரை நோக்கி
புறப்பட்டேன் அவளை காண ,,
தொடரும்,,,,
prabhu351989@gmail.com .