உனது காதல் அன்பு நேரப்போக்கிற்காக இருக்கலாம். ஆனால் நான் உனது நினைவுகளால் வாழ்ந்து மடிந்து போவேனே தவிர வேறு ஒருவரிடம் இந்த மனது மடியாது என்று நான் ஒரு ரில்ஸ்ல கமெண்ட் பன்னி இருந்தேன்.அதில் ஒரு பெண் லைக் செய்து இருந்தால் அன்றைக்கு இரவே அவளிடம் இருந்து ஒரு செய்தி வந்தது.அது ஆங்கிலத்தில் இருந்து நமக்கு இங்கிலிஷ் கொஞ்சம் வீக் அப்புறம் கூகுள் டிரென்ஸ்லெட் ஐடியா கேட்டு மறுபடியும் செய்தி அனுப்பினேன் உடனே எனக்கு மறுசெய்தி வந்தது.பொதுவாக மனிதர்கள் மெசேஜ்க்கு ஆன்லைன் இருந்து கொண்டே மெதுவாக ரிப்ளை பன்னுவது எனக்கு பிடிக்காது அவர் போன் பார்கவில்லை என்றால் பரவாயில்லை சிலர் அப்படி இருப்பார்கள்.உடனே ரிப்ளை வந்து நமக்காக நேரத்தை ஒதுக்கி நம்மிடம் பேச தவிர்க்கிறார்கள் என்றால் நாமும் கண்டிப்பாக பேச வேண்டும் என்று நானும் மறுபடியும் செய்தி தமிழில் அனுப்பினேன்.அவள் மறுபடியும் ஆங்கிலத்தில் பேசினால் நான் நேரடியாக சொல்லிட்டேன் எனக்கு ஆங்கிலம் வாசிக்க தான் தெரியும் அதற்கு மீனிங் தெரியாது என்று அனுப்பினேன்.அவள் பரவாயில்லை என்று அனுப்பி தமிழில் பேசினால் அவள் மலேஷியா என்றால் அவள் சும்மா சொல்லுறாலா இல்லை கதை விடுகிறாலோ என்று யாருக்கு தெரியும் நான் நமக்கென்று ஓர் உன்மையான உறவு கிடைத்தால் போதும் என்று பேச ஆரம்பித்தேன் இருவரும் மாறி மாறி தகவல்களை பரிமாறிக் கொண்டோம் அவளும் என்னிடம் போட்டோ கேட்கவில்லை நானும் அவளிடம் போட்டோ கேட்கவில்லை ஒரு கட்டத்தில் எனக்கும் ஒரு தயக்கம் அவள் ஆணா இல்லை பெண்ணா என்று சரி ஒரு தடவை வாய்ஸ் மெசேஜ் பன்னுவிங்களா கேட்டேன் அவள் அதுக்கென்ன பன்னுற என்றால் உங்களுக்கு எந்த பாடல் பிடிக்கும் சொல்லுங்க அந்த பாட்டே பாடுறன் என்றால்.உடனே நான் என்னை கொள்ளையிட்டு போகும் அழகே வா என்னை
கொன்றுவிட்டு போகும் மலரே வா வாழ்க்கையின் உயிரே வா ஜீவா என்றேன்.அவள் அய்யோ இது எனக்கு தெரியாதே என்றால் வேற சொல்லுங்க என்றால் நான் உனக்கு தெரிஞ்சதை பாடு என்றேன்.அவள் சரி என்று ஒரு வாயிஸ் மெசேஜ் அனுப்பினாள் முதல் தடவை அவளது குரல் ஓசையை கேட்க ஆவலில் ஹெட்போன் காதில் மாட்டி கொண்டு அவளது மெசேஜ் ஆன் பன்னிட்டு கண்களை முடினேன்.அவள் நானும் இங்கே வலியிலே நீயும் அங்கோ சிரிப்பிலே
காற்றில் எங்கும் தேடினேன் பேசி போன வார்த்தையை இது நியாயமா ! மனம் தாங்குமா! என் ஆசைகள் அது பாவமா! என்று பாடினால் அவளது குரலின் ஓசையியும் அந்த பாடலின் வரிகளும் கேட்டு எனது கண்களில் ஈரம் வடிந்தது.எப்படி இருக்கு கேட்டு செய்தி அனுப்பினாள் நான் ஒரு நிமிடம் பதில் அனுப்பாமல் மௌனமாக இருந்தேன் அவள் மறுபடியும் மறுபடியும் ஓய் ஓய் என்னாச்சு தகவல் அனுப்பினால் நான் அதன் பிறகு சொல்ல வார்த்தை இல்லை உங்கள் குரலினால் மெய்மறந்து போனேன் என்றேன் அவள் ஓகோ என்றால் நேரம் தெரியாமல் பேசிக்கொண்டு மணி 3 ஆகிவிட்டது சரி நாளைக்கு பேசுங்க நீங்க இப்போது தூங்குங்க என்றால்.நான் சரியென்று அவளது முகங்கள் எப்படி இருக்கு அவளது கண்கள் எப்போது காண போகிறேன் என்று நினைத்து கொண்டே தூங்கி விட்டேன்.அடுத்த நாள் காலையில் எழும்பி போன் பார்த்தேன் அவளிடம் எந்த தகவல் இல்லை சரியென்று நானும் குட்மார்னிங் போட்டு அவளிடம் எப்போதும் தான் மறுசெய்தி வரும் என்று ஏங்கி கொண்டு இருந்தேன் ஏந்த செய்தி மெசேஜ் வந்தாலும் அவளாக தான் இருக்கும் என்று உடனே போன் பார்த்தேன் ஏமாற்றம் தான் கிடைத்தது நான் இப்படி யாரும் மெசேஜ் க்கு தவிர்த்தது கிடையாது ஒரே நாளில் என்னிடம் பேசி இப்போது தனியாக தவிர்க்க விட்டால் எனக்கு அவ்வப்போது போன் பார்த்து பார்த்து முகம் வாடியது சரியென்று எல்லாம் நோட்டுபிகேசன் ஆப் பன்னி விட்டு போன் தூக்கி போட்டு என்னை நான் தேடினேன்.எதற்கு இப்படி அடுத்தவர் பேசுவார்கள் என்று ஏங்கி கொண்டு இருக்கிற என்று கோபம் எழுந்தது சரி மெசேஜ் வந்தால் பேசு இல்லையென்றால் யாரையும் தேட கூடாது முடிவு பன்னினேன்.போனில் யூடியூப் பார்த்துக் கொண்டு இருந்தேன் அவளிடம் இருந்து தகவல் வந்நது சாரி நல்ல தூங்கிட்டேன் என்றால் மறுபடியும் பேச ஆரம்பித்தோம் இப்படியே போனது தினமும் நடந்ததை என்னிடம் பகிர்ந்து கொள்வது அவள் காட்டிய அன்பு பாதை என்னை எங்கேயோ அழைத்துச் சென்றது.ஒரு கட்டத்தில் அவளே என்னை நேரில் பார்க்க ஆசை படுகிறேன் என்றால் நான் போட்டோ அனுப்புகிறேன் என்றேன் அவள் இல்லை இல்லை நேரில் பார்ப்பது தான் தனி இன்பம் என்றால் உங்களை நேரில் பார்த்து நிறைய பேசனும் என்றால் நான் எப்படி நீங்க மலேசியா நான் இந்தியா நான் அங்கே வருவதற்குள் பல வருடங்கள் ஆகும் என்றேன் அவள் ஏன் என்று கேட்டால் நான் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றேன் நானே தினமும் டீ காபி குடிக்க சரியா போகும் இதுல மலேசியா வருவதற்குள் விடிந்து விடும் என்றேன்.அவள் சிரித்து விட்டு எனக்கு அங்கு வருவதற்கு நேரம் இருக்காது நீங்க இங்கே வருவிங்களா சொல்லுங்க டிக்கெட் நான் போடுகிறேன் என்றால் நான் சரி என்றேன்.ஏற்கனவே சும்மா பாஸ்போர்ட் எடுத்து வைத்து இருந்தேன் இப்போது தான் அது தேவை படுகிறது என்று மனதில் நினைத்தேன்.அவள் எப்போது நீங்க பிரியா இருப்பிங்க சொல்லுங்க நான் அந்த தேதியில் டிக்கெட் போடுகிறேன் என்றால் நான் ஒரு பேச்சுக்கு நாளைக்கே போட்டாலும் வந்திடுவேன் என்று சொல்லிவிட்டேன்.அவளும் சிரித்துக்கொண்டே சரி என்றால் ஒரு பத்து நிமிடம் கழித்து எனக்கு டிக்கெட் அனுப்பி விட்டாள் நான் வியப்புடன் என்ன நாளைக்கே டிக்கெட் போட்ட பெமி என்றேன் அவள் ஆமா நீங்க தானே சொன்னிங்க எனக்கு உங்களை பார்க்க ஆர்வம் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று அதற்காக நாளைக்கே போட்டேன் என்றால் நான் எதுவும் எடுத்து வைக்கவில்லை எப்படி என்றேன் அவள் நீங்க எதுவும் எடுத்திட்டு வர வேணாம் இங்கே வாங்க எல்லாம் வாங்கிக்கலாம் என்றால் வருவதற்கு தேவையான பேப்பர் மட்டும் கொண்டு வாங்க போதும் நான் ஏர்போர்ட் வந்து உங்களை கூப்பிட்டு போறேன் என்றால் நான் என்னடா பொசுக்குனு டிக்கெட் போட்டா போகவா வேனாமா என்று யோசித்தேன் பேசியே கொஞ்சம் நாள் தான் ஆகுது என்றேன் சரி நம்மீது இவ்வளவு அன்பு வைத்து இருக்கிறார்கள் பாசம் வைத்து இருக்கிறாள் அவளை நம்பி போகலாம் அப்படியே ஏமாற்றி விட்டாலும் அந்த நினைவுகளோடு அங்கே மடிந்து விடனும் என்று தைரியத்தில் கிளம்பினேன்.
என் மனதில் தோன்றியதை கற்பனையாக சொன்னேன் மன்னிக்கவும்.இந்த கதை படிக்கும் பெண்கள் உங்கள் உள்ளத்தில் உள்ள கருத்துகளை பகிர நினைத்தால்
marratamil@gmail.com கூகுள் சேட்டுல (அ) மெயிலில் பேசுங்க .