சிவாவின் Yoga எல்லாம் மாயா.. Part – 3

Posted on

என் office க்கு மாயா Event Organising protocol க்காக வந்து HR department போய் function organiserயை meet பண்ண, நான் introduceபண்ணிட்டு என்னோட floor போயிட்டேன். எல்லா formalities ம் முடிந்து, finally event organising contract கிடைக்க, மாயா, ஸ்ருதி இரண்டு பேரும் செம Happy.

சிவாவின் – Yoga எல்லாம் மாயா Part – 2→

அப்ப, மாயா incharge Raghu க்கு thanks சொல்ல, அவர் உடனே எனக்கு ஏன் சொல்றிங்க.. முதல்ல கார்த்திக் கு சொல்லுங்க. He is the Guy, for all these Credit. உங்களுக்காக ரொம்ப fight பண்ணி இந்த contract மாயா வுக்குதான் போகனும்னு பிடிவாதமாக இருந்தான். Such a nice Guy.

அப்பறம் Last time நீங்க இங்க office வந்தப்ப சில அசம்பாவித சம்பவங்கள் நடந்தது, I mean உங்களை someone Karthik Girl friend, fiancee அப்படி, இப்படி னு tease பண்ணதா என்னோட காதுக்கு வந்தது. sorry for that.
Sorry sir, நானும் ரொம்ப Rude ஆ behave பண்ணிட்டேன்.

That’s okay
Karthik க்கு marriage ஆகாததுனால.. அவங்க அப்படி சொல்ல chance இருக்கு..

எனக்கும் ஸ்ருதி க்கும் பயங்கர ஷாக்.
கார்த்திக் bachelor ஆ? நானும் ஸ்ருதியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துகிட்டோம்

அந்த incharge Raghu Karthik பற்றி, event பற்றி என்னென்னவோ பேசிக்கொண்டே இருந்தார்.
எனக்கு எதுவும் மண்டையில ஏறலை.
அவர் எல்லாம் சொல்லி முடிச்சிட்டு, ஒகே event நல்லா Grand ஆ conduct பண்ணுங்க னு சொல்லிட்டு, உள்ள போக,

நாங்க வெளியே வரும்போது, கார்த்திக் ஃப்ரண்ட் ராம் வந்து தானே introduce பண்ணிக்கொண்டு.. congrats, இந்த offer கிடைச்சதுக்கு.. எல்லாம் கார்த்திக் னாலதான். உங்க மேல அவ்வளவு confident. உங்களுக்கு இந்த contract கிடைக்க management கூட ரொம்ப fight பண்ணான்.. By the way கார்த்திக் உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்கான்.. எல்லாமே positive ஆ தான்.. நீங்க good entrepreneur.. super ஆ business பண்றிங்க.. னு. ஓகே, அவனை meet பண்ணிட்டீங்களா?

Yes, meet பண்ணேன். HR Incharge யை Introduce பண்ணி வச்சிட்டு, அப்பறமா கார்த்தி அவரோடு wing போயிட்டார்.

Ok then பார்ப்போம்..bye..

நான் கார்த்திக்…

Evening colony department store ல் mach3 blades, juices. ஏதேதோ வாங்கி கொண்டு,

தம்முடு (தம்பி).. 2 days Back கழுத்து வலி தைலம் சொல்லியிருந்தேன். அப்ப Stock இல்லை.. வந்துடுச்சா? பாரு தம்முடு.

யாரோ என் பக்கத்தில்.. ஏதோ சொல்வது எனக்கு கேட்டது…
வாயைத் திறந்தால் எல்லாம் பொய்..

திரும்பி பார்த்தால் மாயா.. கொஞ்சம் தள்ளி கட்டபுஸ்க்கு.

ஹாய் மாயா..‌ contract கிடைச்சிடுச்சு போல.. congratulations..

ஆனா நீ வாயைத் திறந்தாலே பொய் தான்.

புரியலை, கட்டபுஸ்க்கு உனக்கு ஏதாவது புரியுதா?

ஸ்ருதி உடனே.. அதாண்டா.. உன்னோட wife க்கு twins பிறந்திருக்கு ல்ல அதைப்பற்றி தான் மேடம் கேட்குறாங்க,

ஓ அதுவா.. நேத்து office வந்திருந்திங்கல்ல.. எவனோ போட்டுக் குடுத்துட்டானா?
சரி, ஓகே.. marriage ஆகலை.. இப்ப என்ன அதுக்கு..

அப்பறம் ஏண்டா (மாயா ஸ்வரம் குறைந்து மெதுவாக..) அன்னைக்கு உன் wife அழகா இருக்க மாட்டா.. அப்படி இப்படி னு சொன்ன?

எப்ப?

கட்டபுஸ்க்கு களுக் கென்று சிரிக்க..

மாயா, டேய்..

ஓ yoga class லயா?

அது.. எனக்கு என் அத்தை பொண்ணு ஒண்ணு இருக்கு, அதைத்தான் எனக்கு பேசியிருக்காங்க.. அவ கருப்பா நல்லா இருக்க மாட்டா.. ஸ்ருதி மாதிரி இருப்பா.. அதான் அன்னைக்கு..

ஸ்ருதி, உடனே டேய்.. மவனே…என்னை பத்தி பேசுன.. ஆனா..மாயா, இது இன்னொரு உருட்டு. நம்பாதே.

ஏய் கட்டபுஸ்க்கு உன்ன இரு..

போடா.. மாயா சொல்ற மாதிரி வாயத்திறந்தா எல்லாம் பொய்தான்.

சரி அதெல்லாம் விடுங்க.. ஏங்க, நல்ல ஒரு பிரமாண்டமான event கிடைச்சிருக்கு.. Organise பண்ணப்போறிங்க, அதுவும் AR Rehman sir music concert. Treat லாம் கிடையாதா?
Atleast coffee.. நம்ம பக்கத்து காபி ஷாப் ல?
மாயா, தலையடித்து கொண்டு சிரிக்க..

ஐய்யோ.. மாயா மேடம் சிரிக்திறாங்க.. எப்பவும் என் மேல எரிஞ்சி விழற மாயா இன்னைக்கு..

நீ எப்பவும் இப்படித்தானா? mental, சரி வா coffee shop க்கு.

ஹலோ.. treat simple ஆ இதோட முடிச்சிக்கனும் னு பார்க்காதீங்க. .. நல்ல Grand ஆ party வைக்கனும்.

ஒகே.. ஒகே.. நாளைக்கு ஈவினிங் dinner party நம்ப மூணு பேரும் மட்டும். okay யா?

வாவ்.. எனக்கு தெரிஞ்ச Bar & Restaurent இருக்கு.. dragon chicken, chicken tikka super ஆ இருக்கும், அதை விட hot drinks cocktail, vodka லாம் Original ஆ மஸ்த் தா இருக்கும். அங்க போகலாம். நான் பேசி கொண்டே போக,

மாயா கையை கட்டிக்கொண்டு என்னையே குறு குறு வென பார்த்தாள்.

நீ மாறவே மாட்டியா?
No nonveg.. No alcohol.. only Veg தான் allowed.

நான் v. e..g.. ஆ.. என்று வாந்தி எடுப்பது போல உவ்வே என்று பண்ண..
மாயா முறைத்தாள்.

ஏன் கட்டபுஸ்க்கு. vegetarian food வைக்கிறது லாம் உங்க ஊர்ல ஒரு partyயா?
பாவம் உனக்கு party ல நல்ல vodka drink கொடுக்கலாம்னு பார்த்தேன்.
அதுவும் இல்லையா?.. நீதான் பாவம் ரொம்ப நாளா என்னை கேட்டுட்டே இருந்த vodka வேணும் னு..

ஸ்ருதி, நான் எப்..ப..டா.. உன்னை கேட்டேன். மாயா நீ நம்பாதே..

மாயா, நான் நம்பலை.. எனக்கு தெரியாதா?
இவன் வாயை திறந்தாலே பொய் தானே..

ச்சே.. இங்க உண்மைக்கும், நீதிக்கும் value வே இல்ல..

மாயா, அதை நீ சொல்லாத., Pay பண்ணிட்டு வா.. காஃபி ஷாப் போகலாம்.

காபி ஷாப்..
மூன்று பேரும் order கொடுத்து ட்டு wait பண்ணிகிட்டிருந்தோம்.

மாயா, சரி நீ எப்பவும் இப்படித்தானா?
எப்படி தானா?
அதான் ஜாலியா.. ஒரு seriousness இல்லாமல்,
எதுக்கு serious ஆ இருக்கனும்? செய்யிற வேலையை கஷ்டப்பட்டு செய்யாமல் இஷ்டபட்டு செஞ்சா ஏன் tension?.
இன்னொன்னு இந்த லைஃப் நமக்கு ஒரு தடவை தான் வாழ்றதுக்கு… இதுல forward, backward, pause buttons எல்லாம் இருக்காது. Only Play button மட்டும் தான்.
இருக்கிற ஒவ்வொரு நொடியையும் ஹேப்பி யா enjoy பண்ணி வாழனும். அதான் நம்ம point யே.

ஸ்ருதி, பார்ரா.. philosophy லாம் பேசறான்.
கட்டபுஸ்க்கு நீ ரெண்டு cutting போட்ட னு வச்சிக்க.. இதைவிட philosophy பேசுவ.

போட்டாங்… டோமரே..
போடி ங்கொய்யால..

மாயா, சரி சரி விடுங்க, இப்ப சொல்லு.. ஏதோ கழுத்து வலி, தைலம் னு Store ல கத்திகிட்டிருந்தியே என்னா ஆச்சு?

கத்திகிட்டிருந்தேனா? .. எல்லாம் என் நேரம், அது desk job னால அடிக்கடி pain வருது.

ஓ அதான் Yoga class க்கு வந்தியா?

ஆமாம்.. ஆனா, நான் Yoga class வர்றது சில விஷக்கிருமிகளுக்கு பிடிக்கலை.. அதான் நின்னுட்டேன்.

மாயா, நீதான் அங்க உன் கையை காலை வச்சிகிட்டு, அதுவும் இந்த முட்டை கண்ண வச்சிகிட்டு சும்மா இருக்க மாட்டிறியே..

ஏங்க, அழகை ஆராதிக்கனும்..
நல்லா இருந்தா கண்ணுக்கு அழகு.

இதெல்லாம் நல்லா பேசு.. சரி இனிமேல் நீ Yoga class க்கு வா..

வேணாம்.. என்னால எதுக்கு மத்தவங்களுக்கு problem?

ஸ்ருதி, டேய் ஓவரா சீன் போடாத.. உனக்கு ஒரு சான்ஸ் தான்.. Yoga class வர்றியா இல்லையா?

வர்றேன்.. வர்றேன்…

மாயா தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தவள் நான் பண்ணின action ல் சிரிப்பு வர கொஞ்சம் புறையேறி .. வாயிலிருந்த தண்ணீர் ஸ்ருதி மேலே தெறிக்க,

நான் கட்டபுஸ்க்கு, இப்ப தான் நீ அழகா இருக்க.. நாம ஒரு selfie எடுத்துக்கலாம்.

ஸ்ருதி டேபிளில் இருந்த தண்ணீர் ஜக்கை அப்படியே என் மீது கவிழ்த்தாள்., மாயா மீதும் தண்ணீர் விழுந்தது.

மூவரும் சிரித்து கொண்டே துடைத்துக் கொள்ள..
Order பண்ணிய காஃபி வர, சிரிப்போடு காஃபி யை சுவைத்தோம்.

இந்த சந்தோஷம் ரொம்ப நாள் நிலைக்கவில்லை..
விதி தன் விளையாட்டை ஆரம்பிக்க.. மூவரையும் போட்டு பந்தாடியது.
அடுத்த தொடரில்..

494140cookie-checkசிவாவின் Yoga எல்லாம் மாயா.. Part – 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *