வருண் கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல் இரு ப்ளீஸ் – பாகம் 2

Posted on

சரஸ்வதி: வீட்டுக்கு வந்தாச்சா?
வருண்: வந்து 2-3 மணிநேரம் ஆச்சு. என்ன ஆச்சு இரவு எதுவும் சொல்லாமல் அமைதியாகி விட்டாய்?
சரஸ்வதி: அதெல்லாம் ஒன்றும் இல்லை உறக்கம் வர வில்லை சற்று மேல் மாடிக்கு சென்று அமைதியாக இருந்து பார்த்தேன் ஆனால் என் நினைவுகள் அங்கும் என்னை நிம்மதியாக விட வில்லை
வருண் : நீண்ட நேரமாக பதில் வராமல் இருந்ததை பார்த்து நீ உறங்கி இருப்பாய் என்று நினைத்தேன்
சரஸ்வதி: உறக்கம் என்பதை மறந்து 5 வருடம் ஆச்சு.
வருண்: நீ மீண்டும் மீண்டும் உறக்கம் இல்லை நிம்மதி இல்லை வழக்கை போச்சுன்னு சொல்லுவதற்கு கேட்கும் போதெல்லாம் மனசு வலிக்குது அனால் நீதான் உனக்கு என்ன பிரச்சனை என்று என்னிடம் கூட பகிர்ந்து கொள்ள மாட்டேன் என்கிறாய்.
சரஸ்வதி: அதற்கான தருணம் வரும் பொழுது கண்டிப்பாக உன்னிடம் நான் எனது சோகத்தை பகிர்கிறேன்.
வருண்: சரி, நான் எனது நிறுவனத்தின் விழுப்புரம் கிளைக்கு செல்ல வேண்டும், பிறகு மெசேஜ் பண்ணுறேன்.
வருண் தயாராகி விழுப்புரம் புறப்பட்டான்.
விழுப்புரம் அலுவலகத்தில் இருக்க மீண்டும் சரஸ்வதியின் மெசேஜ்
சரஸ்வதி: எங்க இருக்க? சாப்டாச்சா?
வருண்: விழுப்புரம் அலுவலகத்தில் இருக்கிறேன் இன்னும் உணவு அருந்த செல்ல வில்லை வேலை சுமை கொஞ்சம் அதிகமாக இருக்கு. மதியஉணவு இன்று தாமதம் தான்.
சரஸ்வதி: அம்மா இன்னும் பள்ளியில் இருந்து திரும்பவில்லை அவர்கள் வந்ததும் ஒன்றாக சாப்பிட காத்துகிட்டு இருக்கேன்
வருண்: நேரத்துக்கு சாப்பிட எங்களால் தான் இயலாது வீட்டில் இருப்பவர்களுக்கும் இதே நிலை
சரஸ்வதி: எனக்கு சாப்பிடவோ உயிர் வாழவோ விருப்பம் இல்லை அம்மாவுக்காக இல்லை எனக்காகவும் இல்லை யாருக்காக வாழ்கிறேன் என்று தெரிய வில்லை.
வருண் மனதில் இவள் ஏன் இப்படி விரக்தியாக பேசுகிறாள். ஏன் எதற்கு என்ற எந்த கேள்விக்கும் பதில் அளிக்காமல் நம்மை வார்த்தைகளால் வாடுகிறாளே என்ன செய்யலாம் என்று யோசித்தான்.

வருண்: நான் கேட்டு கேட்டு சலித்து போய்விட்டேன் உனக்கு அப்படி என்னதான் பிரச்சனை?

சரஸ்வதி: 5 வருடங்களை நான் அனுபவித்தது நான் ஏன் மனதை திறக்க எனக்கும் நேரம் ஆகும் வருண் அதை சொல்லும் பொழுது எனக்கு இன்னும் மனா உளைச்சல் ஏற்படும் அந்த வழியை தாங்கக்கூடிய மனநிலையில் இருக்கும் பொழுது நான் உனக்கு அனைத்தையும் கூறுகிறேன்.

வருண் உன்னை நேரில் சந்திக்க விரும்புகிறேன் ஆனால் உன்னை வீட்டிற்கு அழைத்தாலோ இல்லை நான் உன்னை சந்தித்தாலோ என்னை சார்ந்தவர்கள் உனக்கு நெறைய தொல்லை கொடுப்பார்கள்.

வருண்: அதை பற்றி நீ கவலை படாதே, எங்கு சந்திக்கலாம் எப்பொழுது சந்திக்கலாம் என்று கூறு நான் கண்டிப்பாக வருகிறேன். நான் இன்னும் ஒருநாள் மட்டுமே இங்கு இருப்பேன். எனக்கு கொச்சியில் வேலை நியமன செய்து இருக்கிறார்கள் நாளை மறுநாள் எனக்கு ரயிலில் பதிவு இருக்கிறது அதற்குள் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்திக்கலாம்

சரஸ்வதி: நீ நாளைக்கு சாயங்காலம் என் வீட்டிற்கு வரமுடியுமா ? தனியாக வேண்டாம் காயத்ரியையும் அழைத்து வா

வருண்: அவள் வர மறுத்தால் நான் மட்டுமே வருவேன் வீட்டில் அம்மாவும் இருப்பார்களா ?

சரஸ்வதி: அவங்க இல்லாமல் இருந்தால் உனக்கும் எனக்கும் நிறைய தொல்லைகள் வரும், அவர்கள் இருக்கும் பொழுது தான் வர சொல்லுவேன்.

இவள் கூறுவதை பார்த்தால் ஏதோ ஒரு சந்தேக பிராணியிடம் மாட்டிக்கொண்டு அவதி படுகிறாள் போலிருக்கிய என்று தோன்றியது.

வருண்:சரி அம்மா இருக்கும் பொழுதே வருகிறேன்

சரஸ்வதி: நாளை சாயங்காலம் 6:30 மணிக்கு ஏன் வீட்டில் உன்னை எந்திரபார்த்து காத்திருப்பேன் கண்டிப்பாக வர வேண்டும் உன்னை நேரில் சந்தித்து 10 வருடம் இருக்குமா?
வருண்: ஆமாம் உனக்கு 10 வருடங்கள் ஆகின்றன எனக்கு 7-8 வருடம் இருக்கும்.
சரஸ்வதி: 7-8ஆ ? எப்படி ?
வருண்: நேரில் சந்திக்கும் பொழுது குறுகிறேன் எப்படி என்று. உன் விடு ராமகிருஷ்ணா நகரில் தானே இருக்கு?
சரஸ்வதி இல்லை வருண் நானும் அம்மாவும் அந்த வீட்டில் இல்லை நாங்கள் இப்பொழுது அம்மாவின் பள்ளி அருகில் உள்ள வெங்கடேஸ்வரா நகரில் உள்ளோம். நீ அருகில் வந்து அலைபேசிக்கு அழைப்பு கொடு நான் உனக்கு வழிகாட்டுகிறேன்.
வருண்: சரி.
வருண் அன்று அலுவலக பணிகள் முடிந்து மீண்டு திருச்சி திரும்பினான்..

அன்று மாலை திருச்சி வந்தடைந்த வருண் தன் தங்கையிடம் தன்னுடன் சரஸ்வதியை காண வருமாறு மன்றாடினான். தங்கை ஒப்புக்கொள்ள தங்கையுண்டன் அடுத்த நாள் சரஸ்வதியை சந்திக்க புறப்பட்டான் வருண்.
வழியில்
காயத்ரி: என்ன அண்ணா மறுபடியும் காதல் எண்ணத்தோட சரஸ்வதி கிட்ட பழக ஆரம்பிச்சிட்டியா?
வருண்: அதெல்லாம் ஒன்னும் இல்ல ஜஸ்ட் எப்பொழுதும் போல நண்பர்களாய் தான் சந்திக்க போகிறோம் வேறு எந்த ஒரு எண்ணமும் இல்லை.
காயத்ரி: உனக்கு தெரியாதது எனக்கு நிறைய விஷயங்கள் சரஸ்வதியை பற்றி தெரியும் ஆதலால் உன்னை நான் எச்சரிக்கிறேன் இது நட்பாக இருப்பது தான் அனைவருக்கும் நல்லது.
வருண்: சரி தாயே.
சரஸ்வதியின் இல்லத்தை அடைந்தார்களழைப்பு மணியை ஒளிக்க சரஸ்வதி கதவை திறந்தாள்
சரஸ்வதி: ஹாய் காயு வாட் அ சர்பிரைஸ், உன்னை பார்த்து ரொம்ப நாள் ஆகுது.. நலமா?
காயத்ரி: நான் நலம் நீங்க எப்படி இருக்கீங்க.
பின்தொடர்ந்து வந்த வருண்: என்னை யாரும் விசாரிக்க மாட்டிங்களா?
சரஸ்வதி: நல்வரவு சீனியர்..
அனைவரும் வீட்டிற்குள் நுழைய சரஸ்வதியின் தாய் பத்மாவதி அனைவரையும் வரவேற்றார்
பத்மாவதி: உன் பெயர் என்னமா? உன்னை எங்கோ பார்த்தார் போல இருக்கு நீ எந்த பள்ளியில் படித்ததை.
காயத்ரி: ஏன் பெயர் காயத்ரி நான் உங்கள் பள்ளியில் படிக்க வில்லை. நான் ரம்யாவின் தோழி (ரம்யா சரஸ்வதியின் சித்தியின் மகள்).
சரஸ்வதி: இவள் ரம்யாவின் தோழி இவளுடைய அன்னான் வருண் எனக்கு சீனியர்..
வருண்: வணக்கம் ஆன்டி
பத்மாவதி: உன்னை எங்கோ பார்த்தார் பொலவெ இருக்கே.. நன்கு பரிச்சயம் ஆன முகங்கள்.. நீ என்ன பண்ணிட்டு இருக்கப்பா.
வருண்: நான் உள்கட்டமைப்பு வளர்ச்சி துறையில் உள்ள நிறுவனத்தில் உதவி மேலாளராக பணிபுரிகின்றேன், நாளை மறுநாள் நிறுவனத்தின் ஹைதெராபாத் கிளையில் சேரவுள்ளேன்.

பத்மாவதி: ஹைதராபாதில் எனது அண்ணியின் சொந்தக்காரர்கள் உள்ளார்கள் உனக்கு ஏதேனும் உதவி வேண்டுமென்றால் கேள் நான் அவர்கள் மூலமாக செய்து தருகிறேன்.
வருண்: நிறுவனம் சாப்பாட்டுடன் கூடிய தங்கும் வசதி செய்து தரும் அணைத்து வசதிகளும் நிறுவனமே ஏற்பாடு செய்து தரும் ஆதலால் எந்த கவலையும் இல்லை ஆன்டி. எனக்கு ஏதேனும் தேவை பட்டாள் கண்டிப்பாக உங்களுக்கு கூறுகிறேன்.
சரஸ்வதியும் காயத்ரியும் குடி உட்கார்ந்து உரையாட ஆரம்பித்தனர் வருண் எதிர் முனையில் உட்கார்ந்து சரஸ்வதியை கவனித்து கொண்டு இருந்தான்.

128523cookie-checkவருண் கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல் இரு ப்ளீஸ் – பாகம் 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *