மீண்டும் அவளோடு 20

Posted on

சென்ற பகுதியின் தொடர்ச்சி…

மதி கேட்ட அந்த கேள்வியால் ஒருவினாடி இதயத்துடிப்பே நின்றுவிட்டது போல் ஆனது.. உடலும் மனமும் மிகவும் படபடப்பாக தான் இருந்தது. ஆனால் மதி மிகவும் கூலாக சிரித்தபடியே என் மடியில் படுத்திருந்தாள்.. அவளை பார்த்து

“நீ என்ன சொல்ற மதி.?” கேட்க

“ஏன் நா கேட்டது புரியலையா?”

“புரியுது. ஆனா என்ன திடீர்னு இப்படி ஒரு முடிவு? அதான் புரியல..”

“அதபத்தி அப்பறம் தெளிவா சொல்றேன்.. இப்ப நா கேட்ட கேள்விக்கு பதில் மட்டும் சொல்லுங்க.”

“உனக்கும் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க மதி அவங்க லைப் பத்தி கொஞ்சம் யோசிச்சியா?”

“நானே இவ்வளவு நாள் அதபத்தி கவலைபட்டுட்டு இருந்தேன்.. ஆனா இப்ப அந்த கவலையில்ல.”

“கவலையில்லையா? ஏன் கவலையில்ல?”

“ஏன்னா அவங்க தான் நம்மள கல்யாணம் பண்ணிக்க சொன்னதே” ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டாள்.. அவள் இதை சொல்லிவிட்டு அசால்டாக படுத்தியிருந்தாள்.. ஆனால் எனக்கு தான் அவள் சொன்னது என்னவோ போல் இருந்தது.. அதனாலே மடியில் படுத்திருந்த மதியை தட்டி எழுப்பிவிட்டேன்..

“ஏய் மதி என்ன சொல்ற?” மிகவும் சீரியஸ்ஸான தோணியில் கேட்க

அவளும், “ஆமாங்க என் பொண்ணுங்க தான் உங்கள கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்க.”

“அவங்களா? அவங்க எப்படி சொல்லுவாங்க.. சான்ஸே இல்ல” சொல்ல

“இல்ல அவங்க தான் சொன்னாங்க.. உங்களுக்கு சந்தேகம் இருந்தா சாய்ந்தரம் வருவாளுங்க.. நீங்களே வேணா கேட்டு பாருங்க” கொஞ்சம் நக்கலாக சொல்ல எனக்கு உள்ளுக்குள் இன்னும் பதற்றம் குறையாமல் இருந்ததால் இதை கேட்டதும் உதறல் எடுக்க ஆரம்பித்தது..

“உன் பொண்ணுங்கட்ட என்னைய பத்தி ஏற்கெனவே சொல்லி வச்சியிருந்தியா?”

“ஏற்கெனவே சொல்லி வைக்கல.. நேத்து நைட் தான் சொன்னேன். அது கூட நானா சொல்லல.. அவளுங்க தான் துருவி துருவி கேட்டாளுங்க.. அதான் சொல்ல வேண்டியதா போச்சு..”

“அவங்களா கேட்டாங்களா? எப்போ?”

“நேத்து நைட் நீங்க கால் பண்ணதும் உங்கட்ட பேசிட்டு இருந்தேன்ல.. அத எப்படியோ கண்டுபிடிச்சு வந்து கேட்டாளுங்க.”

“என்ன கேட்டாங்க? நீ என்ன சொன்ன?”

மதியின் பார்வையிலிருந்து

நேற்று இரவு.

நான் அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது என்னுடய பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்வதற்காக என் மகள்கள் இருவரும் என்னுடைய ரூமிற்கு பக்கத்தில் வரும் போதே என்னுடைய பேச்சு சத்தம் இருவரின் காதில் விழுந்திருக்கிறது. (அது பின்னால் அவள்கள் சொல்லி தெரியும்) திடீரென உள்ளே வந்து இருவரும் என்னை கட்டிபிடித்து கன்னத்தில் முத்தமிட்டு வாழ்த்தை சொன்னர்.. மகள்கள் இருவரும் வாழ்த்தும் அந்த இடைவெளியில் பேசிக் கொண்டிருந்த காலை கட் செய்துவிட்டேன்.. அவள்கள் இருவரும் வாழ்த்து சொல்லியும் ரூமை விட்டு நகராமல் இருந்தது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. அவள்களிடம்

“ஏய் என்னடி ரெண்டு பேரும் தூங்க போகலியா? இன்னும் இங்கேயே நின்னுட்டே இருக்குறீங்க..” கேட்க

“நாங்க தூங்குறது இருக்கட்டும்.. நீங்க தூங்காம யார் கூட போன்ல பேசிட்டு இருந்தம்மா” கேட்டதுமே எனக்குள் ஒரு வித பயம் வந்து தொற்றிக் கொண்டது. அந்த பயத்தால் படபடப்பாக இருந்தது.. அதனாலே வாயிலிருந்து வார்த்தை எதுவும் வரவில்லை.. என் மகள்களின் முகத்தை அன்னாந்து பார்க்கவே ஒரு மாதிரியாக இருந்தது. நான் அவரிடம் தவறாக எதுவும் பேசவில்லை. தவறாக முறையில் நடந்துக் கொள்ளவில்லை என்றாலும் என் மகள்கள் கேட்ட அந்த கேள்விக்கு பதில் சொல்லும் தைரியம் எனக்குள் இல்லை. ஏற்கெனவே தொற்றிக் கொண்ட பயத்தால் உடல் முழுவதும் வியர்த்து கண்கள் சொருகி கிட்டதட்ட மயக்கம் அடையும் நிலைக்கு வந்துவிட்டேன்.. என்னுடைய நிலையை பார்த்துவிட்டு நந்திதா,

“ஏய் நந்து போய் தண்ணீ கொண்டு வாடி” சொல்ல அவள் வேகமாக போய் பிரிட்டிஜில் இருந்து வாட்டர் கேன் ஒன்றை எடுத்து வந்து குடிக்க வைத்தாள்.. அந்த ஜில்லென்று தண்ணீர் தொண்டைக்குள் போனதும் தான் எனக்குள் இருந்த படபடப்பு கொஞ்சம் குறைய ஆரம்பித்திருந்தது.. இருந்தாலும் எனக்குள் இருந்த பயம் இன்னும் அப்படியே தான் இருந்தது. அந்த பயத்தால் வியர்வைநீர் உடல் முழுவதும் ஆறாக ஓடி கொண்டிருந்தது.

“உன்கிட்ட அப்படி என்ன கேட்டிட்டோம்னு இப்படி பயந்து சாகுற? ஜெஸ்ட் யார்கிட்ட பேசிட்டு இருந்த தான் கேட்டோம்.. அதுக்கு ஏன் இப்படி நேவ்வர்ஸ் ஆகி பாரு எப்படி வேர்க்குது..” நந்திதா பேசிய படியே

“ஏய் நந்து ஃபேன் கொஞ்சம் ஸ்பீடுல வைடி.. ஸ்வர்ட்டிங் நிக்கவே மாட்டிங்குது.” சொல்ல நந்தனா எழுந்து ஃபேன் ஃபுல் ஸ்பீடில் வைத்தாள். அந்த குளிர்ச்சியான காற்று பட்டு படபடப்பும் பயமும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது..

மீண்டும் நந்திதா, “சொல்லும்மா யார் கூட பேசிட்டு இருந்த?” கேட்க எனக்கு மீண்டும் என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாகவே இருந்தேன்..

“இந்த பாரும்மா நீ சொல்ல போற விசயம் இடிஞ்சு போற விசயமா இருந்தாலும் நாங்க இடிஞ்சு போய் உட்காரமாட்டோம்.. சோ நீ கவலைப்படாம தைரியமா சொல்லலாம்..”

“அது வந்து.”

“ம்ம் சொல்லும்மா.. யார் கூட போன்ல பேசிட்டு இருந்த”

“இல்ல எப்படி சொல்றது தெரியல.. கொஞ்சம் பயமும் தயக்கமா இருக்கு..”

“நாங்க உன் பொண்ணுங்க தான.. எங்ககிட்ட சொல்ல என்ன பயம் தயக்கம்?” நந்திதா கேட்க

நந்தனா, “ஏய் இருடி கொஞ்சம்.” அவளை அமைதியாகி விட்டு

என்னிடம் “சரிம்மா நீ யாரு சொல்ல வேண்டாம்.. பட் ஜென் ஆர் லேடியா மட்டும் உண்மைய சொல்லிடு.. நாங்க உன்ன டிஸ்டர்ப் பண்ணல..”

“அது.. வந்து… அது ஜென் தான்.. ஆனா நீங்க நெனக்கிற மாதிரி எதுவும் பேசல” சொன்னதும்

நந்திதா, “நீ என்ன லூசா?” கத்த விலகிய பயம் மீண்டும் வந்து தொற்றிக் கொண்டது.

உடனே நந்தனா, “ஏய் நீ ஏன்டி இந்த மிட் நைட்ல இப்படி கத்துற?”

“பின்ன என்னடி லூசு மாதிரியே பேசிட்டு இருந்தா கடுப்பு வருமா வராதா?”

“ஏய் ஜெஸ்ட் ஸட்ஆப்.. டோன்ட் சவுட். ஜெஸ்ட் திங் அபவுட் மாம் பாயிண்ட் ஆப் யூ ஆல்சோ.” நந்தனா சொல்லிவிட்டு

“சரி அந்த ஜென் எங்கள ஸ்டேஷன்ல வந்து காப்பாத்தின ஆளு தான” சரியாக கேட்க எனக்கு ஒருவினாடி இதயத்துடிப்பே நின்றுவிட்டது. இனி அவரை பற்றி மறைத்து எந்த பிரயோஜனமும் இல்லை என்றாகிவிட்டது.. அதனால் தைரியத்தை வரவழைத்து கொண்டு

“ஆமா.. நீ சொல்றது சரி தான். அவங்கட்ட தான் பேசிட்டு இருந்தேன்.. அவங்களும் வாழ்த்து சொல்ல தான் கால் பண்ணியிருந்தாங்க அதான் பேசிட்டு இருந்தேன்.. மத்தபடி நீங்க நெனக்கிற இல்ல” திரும்பி சொன்னதும்

நந்திதா, “இங்க பாருடி திரும்பி திரும்பி லூசு மாதிரி பேசிட்டு இருக்குறத.”

“ஏய் கொஞ்சம் நேரம் உன் வாய தொறக்காம சும்மா இருடி.. நா தான் கேட்டுட்டு இருக்கேன்ல.”

“சரிம்மா அப்போ அந்த அங்கிள் முன்னாடி இருந்தே தெரியுமா?”

“ம்ம். தெரியும்.”

“எப்ப இருந்து தெரியும்? இந்த பிளாட்டுக்கு வரதுக்கு முன்னாடி இருந்தே தெரியுமா?”

“ம்ம். தெரியும்.” சொல்ல

“எப்படி பழக்கம்?”

“அவங்க வீட்டுக்கு பக்கத்துல தான் குடியிருந்தோம்.”

“ஓ.. ஐ.. சி.. நாங்க சின்ன வயசா இருக்கும் போது நாம் இந்த அங்கிள் வீட்டுபக்கம் குடி இருந்தோமா?”

“குடியிருந்தது நாம இல்ல.. நா. நா தான் குடியிருந்தேன்.” என்றதும்

“என்னம்மா நீ, கமல் பேசுற மாதிரியே சம்மந்தமில்லா பேசி குழப்பிட்டு இருக்க..”

“நா என்ன குழப்புறேன்.. நீங்க கேக்குற கேள்விக்கு பதில் தான சொல்லிட்டு இருக்கேன்..”

“இந்தா பாரு குழப்பமா சொல்லு. அந்த அங்கிள எப்போ இருந்து தெரியும்..?” நந்தனா கேட்க

“எனக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னமே இருந்து தெரியும்.. கிட்டதட்ட முப்பது வருசத்துக்கு முன்னாடியே தெரியும். நா 11படிக்கும் போதுல இருந்து பழக்கம்.”

“பழக்கமா?”

“ம்ம்.. ஆமா.. நா இவங்கள தான் லவ் பண்ணேன்.” சொன்னதும் ரெண்டு பேரும்

“என்னது லவ் பண்ணியா?” ஒரே மாதிரி கோரஸ்ஸாக கேட்க

“ஆமா. எங்க வீட்டுல யாருக்கும் தெரியாம அஞ்சு வருசம் லவ் பண்ணேன்.. ஆனா காலத்துனால ஒன்னு சேர முடியல.”

“ஏன் ஒன் சைடு லவ்வா?” நந்திதா கேட்க

“இல்ல ரெண்டு பேரும் தான் லவ் பண்ணோம்.. சொல்ல போனா முதல்ல லவ் பண்றேன் சொன்னது அவங்க தான்.
நா அவங்க லவ் கொஞ்சம் லேட்டா அக்சப்ட் பண்ணேன்.”

“ம்ம்.. பாருடி.. நம்ம அம்மா லவ் பண்ணி பெரிய லவ் ஸ்டோரியே இருக்கு.” நந்திதா கிண்டல் பண்ண

நந்தனா, “ஏய் சும்மா இருடி.. நீ மேல சொல்லும்மா.”

“இனி மேல சொல்ல என்ன இருக்கு.. அதான் சொல்லிட்டேன்ல.” என்றதும் இருவரும் எனக்கு நெருக்கமாக வந்து

“நீ எப்படி லவ் பண்ணேன் சொல்லும்மா?” இருவரும் சேர்ந்து கேட்க

“எப்படினா புரியல.?”

“அய்யோ அம்மா எப்படி பாத்துப்பீங்க.? எப்படி கமினிகேட் பண்ணுவீங்க.?”

“ரெண்டு பேரும் பாத்துப்போம்.. ஆனா ஊருக்குள்ள அடிக்கடி பாத்துக்கமாட்டோம்.. நா 11th படிக்கும் போது டெய்லி ஸ்கூல் கேட் வந்து நின்றுவாங்க.. வர வழியில யாரும் இல்லைனா பேசிப்போம்.. அவ்வளவு தான்.”

“சரி எப்படி கமினிகேட் பண்ணினா.? இப்ப வாட்ஸ்ஆப், பேஸ்புக் நெறைய வழி இருக்கு. நீ ஏதாவது மெசேஜ் சொல்லனும்னா எப்படி சொல்லுவம்மா.” நந்திதா கேட்க

“ம்ம் மம்மி ஓட ப்ரண்ட் தூது போயிருப்பா” நந்தனா சொல்ல

“ரியலி?” நந்திதா கேட்க

“இல்ல.. நாங்க லவ் பண்ணது அந்த ஊருல யாருக்கும் தெரியாது. என்னோட ப்ரண்ட்ஸ் கூட சொன்னதில்ல.”

“தென் ஹவ் கேன் கமினிகேட் வித் ஹிம்?”

“அப்போ அவங்க கடை வச்சியிருந்தாங்க.. கடையில சாமான் வாங்க போற மாதிரி போய் சொல்ல வேண்டியத சொல்லிடுவேன்.. ஆள் இருந்தா கொண்டு போற ரூபா நோட்டுல எழுதி அவங்க கையில குடுத்திடுவேன்.. நா எதுவும் சொல்லேனா அவங்க ரூபா நோட்டுல எழுதியிருக்கிறத பாத்து தெரிஞ்சுப்பாங்க.” என்றதும்..

“ப்ப்பா.. வாட் ஏ ஐடியா. யூ ஆர் ஏ பிர்லியண்ட் மம்மி.”

நான் நந்தனாவை பார்த்து, “நீ எப்படி அந்த ஜென் அவங்க தான் கண்டுபிடிச்ச.” கேட்க

“இதெல்லாம் ஒரு மேட்டராம்மா? ஸ்டேஷன்ல இருந்து சேவ் பண்ணது கூட பெருசா தெரியல. நீ போய் கெல்ப் கேட்டுருப்ப தான் நெனச்சேன்.. பட் அந்த நைட்டுல சாப்பிட கொண்டு வந்து குடுத்ததா சொன்னில.. அங்க தான் டவுட் ஸ்டார்ட் ஆச்சு.. என்ன தான் கேல்ப் பண்ணாலும் அன்போ காதலோ இருந்தா தான் இந்த மாதிரி தானா அக்கறை எடுத்து கேட்காத கூட செய்வாங்க.
என்னம்மா சரிதான.”

“சரி தான்.. அதான் தெரிய வேண்டியது எல்லாம் தெரிஞ்சுகிட்டிங்கள போய் தூங்குங்க..” சொல்ல இருவரும் மீண்டும் கன்னத்தில் முத்தமிட்டு ‘குட் நைட்’ சொல்லி தூங்க சென்றனர்.. எனக்கோ எனக்குள் இருந்த மனபாரமே முழுமையாக குறைந்தது போல் இருந்தது.

மறுநாள் காலையில் சிக்னலில் வேலை பண்ணிட்டு இருந்தேன்.. அப்போது மகள்கள் இருவரும் வந்து ‘ம்மா’ கூப்பிட என்ன என்பதை போல் பார்க்க

“உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.” என்று சொல்ல

“ஹே வேலை இருக்குடி விடுங்க.. நீங்க ஆபிஸ் கிழம்புறதுக்குள்ள செஞ்சு முடிக்கனும்ல.. லேட் ஆச்சுனா என்னைய கத்த கூடாது” சொல்ல

“அய்யோ ம்மா அதலாம் ஒன்னும் சொல்லமாட்டோம்.. நீ மொதல வா.” சொல்லிட்டு

“ஏய் ஸ்டவ்ஆப் பண்ணிட்டு வாடி” சொல்லிட்டு நந்தனா என்னை கூப்பிட்டு ஹாலுக்கு செல்ல

“ஏய் என்னடி பேச போறீங்க.. அதான் எல்லாம் நைட்டே சொல்லிட்டேன்ல..”

“அதலாம் ஓகே தான். பட் அந்த அங்கிள்க்கு இப்ப யாருமே இல்லையாம்.. தனியா தான் இருக்கிறாராம்..”

“சரி அதுக்கு நாம என்ன பண்ண முடியும்? நாமல கூட கூப்பிட்டு வச்சுக்கிட்டு முடியும்?”

“ம்ம்.. கரைக்டா சொன்னம்மா.. விசாரிச்சதுல அந்த அங்கிளோட ஓயிப் இறந்துட்டாங்களாம். ஒரே பொண்ணும் அமெரிக்கா செட்டில்.. சோ நீ ஏன் மேரேஜ் பண்ணிக்க கூடாது.?” கேட்டதும் நான் ஒருபக்கம் சந்தோஷமாக இருந்தாலும் இந்த சமுதாயத்த நினைக்கும் போது ஒருமாதிரி சொல்ல முடியாத இக்கட்டான மனநிலையில் இருந்தேன். இறுதியில்

“ஏய் உங்களுக்கு பைத்தியம் எதும் பிடிச்சிருச்சா?”

“இந்த வயசுல போய் கல்யாணம் பண்ணிக்க சொல்றீங்க.? நான் தான்டி உங்களுக்கு நல்ல பையனா பாத்து கல்யாணம் பண்ணி வைக்கனும்.. நீங்க என்னடானா எனக்கு மாப்பிள்ளை பாத்திட்டு இருக்கீங்க.”

“ஹலோ.. நாங்க எங்க பாத்தோம்.. நீ தானம்மா முப்பது வருசத்துக்கு முன்னமே உனக்கான ஃபேர் பாத்திருக்க லவ் பண்ணியிருக்க.. அன்பார்சுனேட்லி சேர முடியாம போயிடுச்சு.. இப்ப ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு. யூஸ் பண்ணிக்க சொல்றோம்.”

“அதலாம் ஒன்னும் வேண்டாம்.. அது முடிஞ்சு போன கதை.. நீங்க போய் ஆபிஸ் கிளம்புற வேலைய பாருங்க” சொல்லிட்டு
எந்திரிக்க முயல மகள்கள் இருவரும்

“ம்மா அப்போ உனக்கு அந்த அங்கிள் மேல லவ் இல்லையா?” கேட்க என்ன சொல்வதென்று தெரியவில்லை.

அதலாம் ‘இல்லை’ சொல்லவும் மனம் வரவில்லை. அதனாலே அமைதியாக இருந்தேன்.. நான் அமைதியாக இருப்பதை பார்த்துவிட்டு

“ம்மா நீ சைலண்ட் இருக்குறத பாத்த யூ ஆர் ஸ்டில் இன் லவ் வித் ஹிம்.” சொல்ல

“ஆமா.. இன்னும் அவங்கள லவ் பண்ணிட்டு தான் இருக்கேன்.. போதுமா” சொல்லி எனக்குள் இருந்த சந்தோஷத்தை சமுதாயத்தினால் ஏற்பட்ட கோவத்தை எல்லாம் அந்த கத்தலில் மூலம் வெளிபடுத்தினேன்.. நானிருக்கும் நிலையை பார்த்துவிட்டு இருவரும்

“இப்ப எதுக்கு டென்சன் ஆகுற. நீ பெத்த பொண்ணுங்க நாங்களே எதும் சொல்லல.. நீயா ஏன் உன் மைன்ட் போட்டு தேவையில்லாம கன்பியூஸ் பண்ணிக்கிற.”

“முதல்ல உங்க கல்யாணம் தான்.. மத்தத பத்தி என்னால நெனச்சு கூட பாக்க முடியல.”

“சரி.. நீ சொல்ற மாதிரி நாங்க ரெண்டு பேரும் மேரேஜ் பண்ணி போய்ட்டா உன்ன யார் பாத்துப்பா சொல்லு..”

“என்னைய நா பாத்துப்பேன்.” சொல்ல இருவரும் என் மேல் கடுப்பாகி

“இந்தா பாரும்மா ஈவினிங் வரை தான் டைம். அதுக்குள்ள அந்த அங்கிள்ட்ட பேசி எங்களுக்கு உன் முடிவு என்னானு சொல்ற.. இல்ல நாங்களே போய் கேட்டுக்கிறோம்” சொல்லிட்டு என் பதிலை கூட எதிர்பார்க்காமல் சென்றுவிட்டனர் என நேற்று இரவு நடந்ததிலிருந்து எல்லாவற்றையும் அவரின் தோளின் மீது சாய்ந்தபடி சொல்லி முடித்து அவரின் உள்ளங்கையில் முத்தமிட்டேன்.

“சரி இப்ப சொல்லுங்க.? நாம கல்யாணம் பண்ணிக்கலமா? இல்ல இந்த லிவ்விங் டு கேதரா?” கேட்க அவர் இப்போதும் எந்த பதிலும் சொல்லாமல் தான் இருந்தார்.. அவரின் முகத்தை பார்க்க இன்னும் அதே குழப்பத்தில் தான் இருக்கிறார் என்பது தெளிவாக தெரிந்தது.

“இந்தா பாருங்க.. நா ஈவினிங் பதில்ல சொல்லலேனா கண்டிப்பா அவளுங்க உங்கள தேடி வந்துருவாளுங்க..”

“ம்ம்.” மட்டும் அவர் சொல்ல

“உங்க பொண்ணு ஏதாவது சொல்லுவா நெனச்சு ஃபீல் பண்றீங்களா?”

“இல்ல. இல்ல அவளாம் எதும் சொல்லமாட்டா. இத சொன்னா சந்தோஷ படுவ.”

“பின்ன என்னங்க.? நாம உடனே கூட கல்யாணம் பண்ணிக்க வேணாம்.. என் பொண்ணுங்க ரெண்டு பேருக்கும் நல்ல பையனா பாத்து முடிச்சிட்டு கூட பண்ணிக்கலாம்” சொல்ல

“உனக்கு எந்த பிரச்சினையும் வராம இருந்தா சரி தான்” அவர் சொன்னதும் சந்தோஷத்தில் அவரின் தலையை திருப்பி மீண்டும் அவரின் இதழை கவ்வி உறுஞ்சினேன்.. எனக்கு போதும் என மனதில் தோன்றிய பிறகே அவரின் இதழை விடுவித்தேன்.. அதன் பின் என் மகள்கள் ஆபிஸிலிருந்து வரும் வரை அவருடன் தான் இருந்தேன்.

வெங்கடேசன் பார்வையிலிருந்து..

மாலையில் மதி வந்து அவள் மகள்கள் பார்க்க வேண்டும் என்கிறார்கள் சொல்லி கூப்பிட்டு போனாள். மதியின் மகள்கள் இருவரும் ஒரே கலரில் ஒரே மாதிரியான சேலையை கட்டி பார்ப்பதற்கு லட்சணமாக இருந்தார்கள்.. என்னை பார்த்தும் இருவரில் ஒருத்தி

“வாங்க அங்கிள்” என்றதும்

மற்றொருத்தி “இன்னும் என்னடி அங்கிள் சொல்லிட்டு இருக்க.. அப்பானு சொல்லுடி” சொல்ல

“அதுவும் சரிதான் சொல்லி வாங்க அப்பா” உள்ளே கூப்பிட்டு உட்கார வைத்தனர்.. நான் எதுவும் பேசவில்லை. அவர்கள் இருவரும் தான் பேச்சை ஆரம்பித்தனர்..

“நீங்க ஓகே சொன்னதா அம்மா சொன்னாங்க.. எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.. எங்களுக்கு பிறகு அம்மா பாத்துக்க நீங்க இருக்கீங்க.. நீங்க இத பத்தி உங்க பொண்ணுட்ட பேசிடுங்க.” என்றனர்..

“சரி.. ஆனா உங்க அப்பா?” தயங்க என் தயக்கத்தை புரிந்துக் கொண்டு அவர்களே

“யாரு எங்கப்பனா? அந்த ஆளு வெளிநாட்டுல வேலை கெடச்சுருக்கு எங்கள விட்டு போய் பதினைஞ்சு வருசம் ஆச்சு. வெளிநாட்டுக்கு போன கொஞ்ச நாள் போன் பண்ணி பேசுவார்.. அடுத்து அதுவும் இல்லாம போச்சு.. இதுவரை ஒரு தடவ கூட எங்கள வந்து பாத்ததில்ல. இனி வருவார் நம்பிக்கை இல்ல.. அதனால நீங்க அவர பத்தி எதுவும் கவலைபடாதீங்க.. அதை மீறி வந்தா நாங்க பாத்துக்கிறோம்” என தைரியமாக பேசினர்..

அதன் பின் எல்லாரும் பொதுவான பல விசயங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். பல வருடங்களுக்கு பின் இது மாதிரி ஒரு குடும்பத்துடன் உட்கார்ந்து சில மணி நேரம் பேசியது மனதுக்கு சந்தோஷமாக இருந்தது.

அடுத்த ஐந்து மாதத்திற்குள்

என்னுடைய கிராமமான சாந்தமங்கலத்தில் ஏற்கெனவே பார்த்திருந்த வீட்டை வாங்கி அதை இடித்துவிட்டு கொஞ்சம் பெரியதாக சேகரில் மேற்பார்வையிலே கட்ட சொல்லியிருந்தேன்.

அதற்குள் மதியின் மகள்கள் இருவருக்கும் நல்ல வரன் பார்த்து முடித்து வைத்தோம்..

வீடு கட்டி முடிந்ததும் அதற்கு பால் காய்ச்சி நானிருந்த ப்ளாட்டை மட்டும் விற்று விட்டு நானும் மதியும் புதிதாக கட்டிய வீட்டிற்கு கணவன் மனைவியாக குடிபெயர்ந்தோம்.

அன்று இரவு எங்கள் காதல் ஸ்பாட்டான அந்த பனைமரத்திற்கு அடியில் நான் உட்கார்ந்திருக்க மதி என் மடியில் தலை வைத்து படுத்திருந்தபடியே

“என்னங்க நாம ரெண்டு பேரும் திரும்பி இப்படி ஒன்னா காதலர்கள் மாதிரி நம்ம இடத்துலே இருப்போம் நெனச்சு கூட பாக்கல.”

“ஆமா மதி நானும் “மீண்டும் உன்னோடு நான்” இப்படி இருப்பேன் நெனச்சு பாத்ததில்ல..”

“அப்ப தான் நீங்க கேட்டத என்னால குடுக்க முடியல.. இப்ப தரேன்.. எடுத்துக்கோங்க.”

“எத மதி எடுத்துக்க சொல்ற.?”

“அய்யோ அத்தான் என்னைய தான் சொல்றேன் எடுத்துக்கோங்க” சொல்லி அவள் கட்டியிருந்த சேலையின் மாராப்பை விலக்கி என்னை நெஞ்சோடு இறுக்க அணைத்து அந்த இரவு முழுவதும் திகட்ட திகட்ட இன்பத்தை வழங்கினாள் என் மதி..

இந்த தொடர் இனிதே முடிவுற்றது…

இந்த தொடருக்கு ஆதரவு தந்து கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்..

இந்த தொடர் என் மன திருப்திக்காக எழுத ஆரம்பித்தது தான்.. இது மாதிரியான கதைகள் எத்தனை பேருக்கு பிடிந்திருந்தது. எத்தனை பேர் இந்த தொடரை ரசித்தனர் என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் இந்த தொடரை எழுத ஆரம்பித்த அந்த தருணத்தில் இருந்து முடிக்கும் வரை நான் மிகவும் ரசித்து தான் எழுதினேன்..

உண்மையான காதல் அதன் மூலம் பெறப்படும் காமத்தை சொல்ல ஆட்கள் யாரும் இல்லை என்பது என் கருத்து. அதனாலே தான் இந்த தொடரை யாரும் விரும்பாவிட்டாலும் பரவாயில்லை என முழுமையாக எழுதி முடித்தேன். இனி இந்த தளத்தில் யாரும் இதுவரை எழுதிடாத கருவை வைத்தே எழுத விருப்பபடுகிறேன்.. கதை படிக்கும் உங்களின் ஒத்துழைப்பு இருந்தால் இது சாத்தியம்.

384701cookie-checkமீண்டும் அவளோடு 20

2 comments

  1. உண்மை ஐயா‌, உண்மை காதல் காலங்கல் கடந்தும் நிலைத்து இருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *