மீண்டும் அவளோடு 15

Posted on

சென்ற பகுதியின் தொடர்ச்சி…

வீட்டிற்கு வந்து அமைதியாக உட்கார்ந்தாலும் என்னால் இந்த எதிர்பாரா ஏமாற்றத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இனி நாளை காலை வரை காத்திருக்க வேண்டும் என நினைக்கும் போதே பைத்தியம் பிடிப்பது போல் இருந்தது. இதிலிருந்து எப்படி மீண்டு வருவேன் என போகிறேன் என தெரியவில்லை.

ஒவ்வொன்றையும் நினைக்கும் போதே அப்படியே பைத்தியம் பிடித்தது போல் இருந்தது. தலையில் கை வைத்தபடி கீழே குனிந்து என்ன செய்வதென்று என ஒன்றும் புரியாமல் உட்காந்திருந்தேன்..
அந்த சமயம் பார்த்து மனசாட்சி மீண்டும் என் முன்னால் வந்து நின்று நானிருக்கும் நிலையை பார்த்து விட்டு

“என்னப்பா.. ஏதோ இடிஞ்சு விழுந்தாப்ல உட்காந்திருக்க?” மனசாட்சி கேட்க நான் குனிந்த தலையை நிமிர்ந்து பார்த்து

“ஓ.. நீயா? என்னடா இன்னும் வரலையே பாத்தேன்.. இந்த வந்திட்டில”

“ஆமா இப்படி உட்காந்திருந்தா எப்படி வராம இருப்பேன்..?”

“பிரச்சனைல இருக்குற என்னைய பாத்த உனக்கு என்ன தோணும்?”

“என்ன தோணும்னா? உதவி ஏதாவது பண்ணலாம் தான் தோணும்.. வேற என்ன தோண போகுது..?”

“உதவியா? ஹா.. ஹா..” சொல்லி சத்தமாக சிரிக்க ..

“நீ சொன்னத கேட்டதுக்கு எனக்கு இது வேணும்.. இன்னமும் வேணும்..”

“ஏன் இப்ப என்ன நடந்து போச்சுனு.? இந்த குதி குதி குதிக்குற.”

“ம்ம்.. எதாவது நடந்தா தான் பரவாயில்லேயை.. இங்க எதுமே நடக்கலையே? அதான பிரச்சினை.”

“எதும் நடக்கலையா? என்ன நடக்கல? கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லு..”

“இன்னிக்கு நீ சொன்ன மாதிரி கவிதையெல்லாம் யோசிச்சு எழுதி மதி பாக்க போனேன்.. ஆனா இன்னிக்கு சன்டே.. அதனால அவளோட பொண்ணுங்க இருந்ததால என்னால போய் பாக்கவே முடியல.. பாக்கவும் முடியாது தெரிஞ்சு அப்படியே திரும்பி வந்துட்டேன்” சொல்ல இப்போது மனசாட்சி ஹா.. ஹா.. சத்தமாக சிரித்தது..

“என்ன நிலைமய பாத்த உனக்கு சிரிப்பா இருக்கு.. சிரி.. சிரி. நல்லா சிரி..”

“பின்ன சிரிக்காம வேற என்ன பண்ண சொல்ற.. இன்னிக்கி முடியலேனா நாளைக்கு போய் பாரு.. இவ்வளவு தான. இதுக்கு எல்லாம் போய் ஃபீல் பண்ணிட்டு இருக்க..”

“நாளைக்கு போய் பாக்கலாம். பட் அதுவரை வெயிட் பண்ணிட்டு இருக்கனும்..”

“உன்ன மாதிரி ஆளுக்கு காத்திருப்பதும் காதல்ல ஒரு சுகம் தெரியாதா?”

“தெரியாதே..” உடனடியாக சொல்ல

“என்னது தெரியாதா?” மனசாட்சி அதிர்ச்சியில் கேட்க

“ம்கூம் தெரியாது.. நா லவ் பண்ற டேஸ்ல இவ்வளவு தூரம் அவள பாக்குறதுக்காக வெயிட் பண்ணதே இல்ல..”

“பின்ன.?”

“மதி ஸ்கூல், காலேஜ் படிக்கும் போது கரைக்ட் டைம்க்கு கன் மாதிரி வெளிய வந்துடுவா.. சோ.. இந்த வெயிடிங் ப்ராப்ளம் இல்ல..”

“அப்ப லவ் பண்றப்ப இல்ல.. இப்ப அந்த மாதிரி சிட்டிவேஷன் இருக்கு. வருது. ஃபேஸ் பண்ணு..”

பாக்க முடியலேனு ஃபீல் பண்றியே.. நாளைக்கு போய் பாக்கும் போது ஏன் பாக்க வரலைனு கேட்டு கண்டமேனிக்கு திட்டுனா என்ன பண்ணுவ. அப்பவும் இது மாதிரி மதி திட்டிடாளே ஃபீல் பண்ணிட்டு உட்காந்திருப்பியா? மனசாட்சி கிண்டல் பண்ண என் நிலைமை பாத்த உனக்கு கிண்டல் தான் தெரியும்..

“சரி அப்படிதான் வச்சுக்கோயேன்” என சொல்லிவிட்டு மனசாட்சி மறைந்தது.

அதன் பின் எனக்கு அங்கு உட்காந்திருக்க பிடிக்காமல் எழுந்து வெளியே வந்து ஸ்டோன்பெஞ்சில் உட்காந்திருந்தேன். சிறிது நேரத்தில் மதி அவள் ப்ளாட்டிலிருந்து ஏதோ வாங்குவதற்காக கீழே இறங்கி வந்தாள்.

எதேர்ச்சியாக என் பக்கம் திரும்பி நான் உட்காந்திருப்பதை பார்த்ததும் முதலில் ஒரு மாதிரி அதிர்ச்சியாகி பின் சுதாரித்து முகத்தை திரும்பி கொண்டு சென்றுவிட்டாள். அவள் பார்த்ததும் திரும்பி கொண்டு சென்றதுமே என் மீது கோபமாக இருக்கிறாள் என்பது நன்றாக தெரிந்தது.

யோசித்து பார்க்கும் போது அவளின் கோபத்திலும் நியாயம் இருக்க தான் செய்கிறது. நானாவது இன்று காலையில் தான் அவளை பார்த்திட முடியும் என எதிர்பார்த்து சென்று முடியாமல் ஏமாற்றத்தோடு திரும்பி வந்தேன். ஆனால் மதியோ இரண்டு மூன்று நாட்களாக எதிர்பார்த்து ஏமாற்றத்தோடு இருப்பாள்..

அதனால் இப்போது வெளிப்படுத்திய கோபம் நியாயமானது தான் என நானாக மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்..

சில சமயங்களில் காலம் செய்ய வேண்டிய காரியத்தை மிக சரியாக செய்துவிடும். என்னுடைய விஷயத்திலும் அப்படி தான் நடந்தது. என்றைக்கு மதியின் கண்ணில் படாக்கூடாதென்று நினைக்கிறனோ அன்றைக்கு தான் அவளின் கண்ணில் பட்டுக் கொண்டே இருந்தேன்..

அன்றைக்கு மாலையில் தனிக்காச்சலத்துடன் ஸ்டோன் பெஞ்சில் உட்காந்து பேசிட்டு இருக்கும் போது மதியும் கௌரி இருவரும் சேர்ந்தபடி கையில் ஒருபையுடன் இறங்கிவந்தனர். அப்போதும் அவளின் கண்ணில் பட்டுவிட்டேன்.. இந்த முறை என்னை பார்த்ததும் கோபமாக ஏதோ வாயில் முனுமுனுத்தபடி கடந்து சென்றாள்..

இவளுக்கு இருக்கும் கோபத்தை பார்த்தால் நாளைக்கு போய் பார்க்கும் போது என்னென்ன சொல்லுவாளோ என நினைக்கும் போதே மனம் படபடவென அடித்து கொண்டது. என்ன தான் மனம் அடித்துக் கொண்டாலும் நாளைக்கு போய் அவளை பார்த்து பேசுவதை கண்டிப்பாக செய்துவிட வேண்டும் என உறுதியாக இருந்தேன்..

இங்கு பக்கத்தில் உட்காந்து பேசிட்டு இருக்கும் தனிக்காச்சலம் என்ன சொன்னார் என காதுக்குள் போகவில்லை. என் நினைவு முழுவதும் மதியை சுற்றியே தான் இருந்தது. வெளியே பையை எடுத்துக் கொண்ட போன மதியும், கௌரியும் திரும்பி வரும் போதும் மதியின் கண்ணில் பட கொஞ்சம் உக்கிரமாக முறைத்துக் கொண்டு தலையை திருப்பி குனிந்தபடி படியேறி சென்றாள்..

கொஞ்சம் கோமதியின் பார்வையிலிருந்து..

இத்தனை நாளும் இங்கிருந்தாரா இல்லை இன்று மட்டும் தான் இங்கியிருக்கிறாரா? எதுவாக இருந்தால் என்ன? என்னை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சமாவது இருந்தால் இந்நேரம் வந்து பார்த்திருப்பார்.. ஒருவேளை நான் அடிக்கடி பார்க்க வேண்டாம் என சொன்னதை மனதில் எதும் வைத்துக் கொண்டு இப்படி செய்கிறாரா? என்ற கேள்வியும் எழ தவறவில்லை. பின்

ச்சே அப்படியெல்லாம் இருக்காது.. அப்படி இருந்தால் அதை அவரின் பார்வையே சொல்லிவிடும் என எனக்கு நானே மனதில் நினைத்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருந்தேன்.

வெங்கடேசன் பார்வையிலிருந்து…

மறுநாள் காலையில் எழுந்திருக்கும் போதே மிகவும் சுறுசுறுப்பாக இருந்தேன். காலைகடன் மற்றும் காலை வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு அந்த டப்பாவை எடுக்கும் போது தான் நேற்று எழுதின கவிதை நியாபகம் வந்தது. அதை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக,

“உன்னை காண வேண்டுமென வந்தேன்
ஆனால்,
வந்ததற்கு கிடைத்தது என்னவோ
எதிர்பாரா ஏமாற்றம் மட்டுமே” என எழுதி அதோடு என் ப்ளாட் டிடைல்ஸ் மற்றும் மொபைல் நம்பரை எழுதி மீண்டும் அதே டப்பாவில் வைத்து அதை எடுத்துக் கொண்டு கிளம்பினேன்..

என் வீட்டிலிருந்து கிளம்பி செல்லும் போதே மதி வீட்டில் யாரும் இருக்க கூடாது என கடவுளை வேண்டிக் கொண்டே சென்றேன்.. அவள் வீட்டை நெருங்க நெருங்க ஏதோ இனம் புரியாத பயம் வந்து தொற்றிக் கொண்டது. இருந்தாலும் பின் வாங்காமல் அவள் வீட்டை அடைந்தேன்.

வெளியில் நின்று உள்ளே இருந்து வேற யாராவது பேசும் சத்தம் ஏதாவது வருகிறதா என பார்த்தேன். நல்லவேளை அப்படி ஒன்றும் வரவில்லை. அதை நினைத்து கொஞ்சம் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருந்தேன். அந்த சந்தோஷத்துடனே வேகமாக அவள் வீட்டு காலிங் பெல் அமுக்கினேன்.. உள்ளே இருந்து யாரு என மதியின் சத்தம் மட்டுமே வந்தது. மீண்டும் ஒருமுறை காலிங் பெல்லை அமுக்கினேன்..

“நா தா யாரு கேக்குறேன்ல.. இருங்க வரேன்” என்றாள்..

“அப்பாடா மதி வர போகிறாள்” என சந்தோஷமாக இருந்தேன்..

அவள் வந்து கதவை திறக்கும் அந்த சில வினாடிகளை கடக்க கூட பொறுமை இல்லாமல் அங்கும் இங்கும் தலையை திருப்பி வேறு யாராவது என்னை கவனிக்கிறார்களா என பார்த்துக் கொண்டே இருந்தேன். மதி வந்து கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் அவளை திரும்பி பார்த்தேன்.

அவள் வியர்வை விறுவிறுக்க வேலை செய்ததோடு அப்படி வந்து கதவை திறந்திருக்கிறாள். நெற்றியில் இருந்து வியர்வை வழிந்து ஓடியது.. அவள் நைட்டியில் இருந்தாள். எனக்கு தெரிந்த நாளிலிருந்து இப்போது தான் அவள் நைட்டி போட்டு பார்க்கிறேன். இதில் கூட அவள் அழகாக தான் தெரிகிறாள். அதுவும் இந்த வயதிலும்..

அவள் “உள்ளார வாங்க” என்றதும் தான் சுயநினைவுக்கு வந்து பின் உள்ளே சென்றேன்.. என்னை கேட்காமலே ஒரு டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து குடுத்தாள்..

அவள் குடுத்ததற்க்காக கொஞ்சம் குடித்தேன்.. இப்போது அவளை நிமிர்ந்து பார்க்கும் போது நைட்டியின் மேல் ஒரு துண்டை போட்டு தன் உள்ளழகை வெளியே தெரியாதபடி மறைத்திருந்தாள்.. அவளின் அழகை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டேயிருந்தேன்..

மதி தான், ம்கூம் இறுமியபடி “என்ன இந்த பக்கம்?” என கேட்டாள். அப்போது தான் நியாபகம் வந்து,

“இல்ல இந்த டப்பாவ குடுத்திட்டு அப்படியே உன்னையும் பாத்திட்டு போலாம் தான்” இழுத்து கொண்டே சொல்ல

“ஓ.. டப்பாவ மட்டும் குடுக்குற சாக்குல என்னையும் பாத்திட்டு போலாம் வந்திங்க.. அப்படிதான” மதி கேட்க

நானும் ஏதோ ஒரு நியாபகத்தில் ஆமா என சொல்ல வந்து பின்

“இல்ல இல்ல.. அப்படியெல்லாம் இல்ல.. சும்மா இந்த டப்பா மட்டும் குடுத்துட்டு போலாம் வந்தேன்” தட்டுதடுமாறி சொல்ல..

“சரி.. சரி நம்பிட்டேன்.. கொஞ்சம் இருங்க வரேன்” சொல்லிட்டு உள்ளே போனாள்..

கோமதியின் பார்வையிலிருந்து…

“என்ன இப்படி திடீர்னு வந்துருங்காங்க. நா மூனு நாளா வருவார் வருவார் என எதிர்பார்த்தேன். அப்ப எல்லாம் வரவே இல்ல. ஒருவேளை நா அடிக்கடி வேணாம் சொன்னதுனால இப்ப வந்துருகாங்களோ.. ம்ம்.. அப்படி கூட இருக்கலாம். பட் சான்ஸ் கிடைச்சா இன்னும் கொஞ்சம் டீஸ் பண்ணி பாக்க தோணுச்சு..”

இதையெல்லாம் கிச்சனுக்குள் நின்று நினைத்துக் கொண்டியிருக்க அப்போது தான் நான் இங்கே வந்து நேரம் ஆனதே தெரிந்தது.. வேகமாக பாலை காய்ச்சி ஒரு டம்ளரில் ஊற்றி எடுத்துக் கொண்டு போய் குடுத்தேன். அவரும் அதை மறுக்காமல் உடனே வாங்கி குடித்தார்.

அதன் பின் இருவரும் சில பொதுவான விஷயங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.. கடைசியில் கிளம்பும் போது என்னிடம்

“அடுத்து எப்போ எப்படி உன்ன பாத்து பேசிறது” கேட்க உடனே யோசிக்காமல்

“அதான் ஏற்கெனவே சொல்லியிருக்கேன்ல.. அடிக்கடி பாத்துக்கிறது வேணாம். நம்மாள எதேர்ச்சியா தனியா பாத்துகிட்டா பேசிக்கலாம்.. மத்தபடி டெய்லி பாத்து பேசிக்க வேணாமே” என்றேன்..

அவரும் “ம்ம் சரி அப்ப வரேன்” என சொல்லிவிட்டு கிளம்பி சென்றார். அவர் அதை சொல்லும் போதே உள்ளுக்குள்ளே இருக்கின்ற வருத்தம் அப்படியே தெரிந்தது. ஒரு காதலியாக அவர் வருத்தபட வைத்தது எனக்கு தர்ம சங்கடமாக தான் இருந்தது.

இருந்தாலும் இரு பெண் குழந்தையின் தாயாக பார்க்கும் போது இதை சொல்லி தான் ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால் தான் அதை சொன்னேன்.. இப்போதும் என்னை பற்றி முழுமையான புரிதல் இருந்தால் முழுமனதுடன் நான் சொன்னதை புரிந்து ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கை இருந்தது..

வெங்கடேசன் பார்வையிலிருந்து…

மதியை பார்த்து பேசிவிட்டு வந்தாலும் இன்னும் ஏதோ குறை ஒன்று இருப்பது போல் மனதிற்குள் தோன்றியது. அது என்னவென்று அப்போதைக்கு என தெரியவில்லை. ஆனாலும் அது என்னவாக இருக்கும் என நினைத்துக் கொண்டே இருக்கும் சமயத்தில் மனசாட்சி மீண்டும் என் முன்னால் வந்து நின்று

“என்ன உன் ஆள பாத்து பேசினியா?”

“பாத்தேன்.. பேசினேன்.. ஆனா இன்னும் ஏதோ ஒன்னு மிஸ்ஸிங் மாதிரியே ஃபீல் ஆவுது. அது தான் என்னானு தெரியல..”

“ஓஹோ.. அப்படியா?”

“உனக்கு தெரியுமா?” நான் கேட்க

மனசாட்சி, “என்ன லொல்லா? இத்தனை வருசமா ஆர்மில இருந்த உனக்கே தெரியல. அப்ப அப்ப வந்துட்டு போற எனக்கிட்ட தெரியுமா கேக்குறியே.. இதெல்லாம் உனக்கே நியாமா படுதா?”

“இல்ல. நீ என் மனசாட்சி தான. அதான் கேட்டேன்.. உன் மனசாட்சி வேற எப்படா இருக்கும். உன்னைய மாதிரி தான இருக்கும்..”

“சரி.. இப்ப எதுக்கு வந்த?”

“நீ போன விசயம் என்ன ஆச்சு கேட்டு போலாம் வந்தேன்..”

“அடுத்த எப்போ மீட் பண்றது கேட்டேன்..
அதுக்கு அவ அடிக்கடி பாத்துக்க வேணாம் சொல்லிட்டா”

“ஓ. ஐ. சி. நீ என்ன பண்ணறதா முடிவுக்கு பண்ணியிருக்க.”

“அவளா வந்து பேசுற வரைக்கும் வெயிட் பண்ண வேண்டியது தான்..”

“ம்ம். சூப்பர்.. கரெக்ட்.. நம்ம கெத்த நாம விட்டு தரக் கூடாது.. என்ன நா சொல்றது.?” மனசாட்சி சொல்ல நான் அதுக்கு எதும் பதில் சொல்லாமல் இருந்தேன்..

“இந்த பாரு. இப்ப தான் நீ கரெக்டான முடிவு எடுத்திருக்க? அப்படியே இரு. மாறிடாத” என சொல்லிட்டு மறைந்தது..

அதன் பின் ஒருவாரம் மேல் வாக்கிங் செல்லும் போதெல்லாம் மதியை பார்த்தாலும் அவளுடன் ஆட்கள் இருந்ததால் பேசமுடியவில்லை. அவள் மட்டும் தனியாக எதும் வெளியே வருவாளா என பார்த்தேன்.

அப்படி எதும் நடக்கவில்லை. அப்படி நடக்கும் என்ற நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. அந்த சமயத்தில் தான் ஒரு நாள் இரவு என் ப்ளாட் காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டது..
இந்த நேரத்தில் யாராக இருக்கும் என யோசித்துக் கொண்டே போய் கதவை திறந்தேன்..

மீண்டும் அவளோடு வருவேன்..

384601cookie-checkமீண்டும் அவளோடு 15

1 comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *