சென்ற பகுதியின் தொடர்ச்சி.
மதியினுடைய உதடு என் உதட்டில் எதிர்பாரா தருணத்தில் பட்டதும் என்ன செய்வதென்றே தெரியாமல் அப்படியே இருந்தேன். அவள் தன் உதட்டை வைத்ததும் எடுத்துவிடவில்லை. அப்படி எடுக்க வேண்டும் எனவும் நினைக்கவில்லை போலும். அவளின் மகள்களை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் காப்பாற்றியதற்காகவா இந்த காதல் முத்தம் என நினைத்தேன்.
நானிருந்த நிலையில் என் மதி என்னிடம் நின்று ஒரு வார்த்தை பேசிடமாட்டாளா என ஏங்கிக் கொண்டிருந்தேன். அப்படி இருக்கும் வேளையில் காலமா இல்லை கடவுளா என தெரியவில்லை.
அவளை என்னை தேடி அந்த இரவு நேரத்திலும் வருமாறு நடந்த சம்பவம் கசப்பாக இருந்தாலும் கசப்பு எப்படி உடலுக்கு நல்லதோ அதை போல் ஒரு கசப்பான சம்பவம் கூட இனிப்பான தருணத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பது அப்போது தான் புரிந்துக் கொண்டேன்.
அவளின் உதடு எவ்வளவு நேரம் என் உதட்டை கவ்வி தன் பிடியில் வைத்திருந்தது என தெரியவில்லை. அவள் குடுத்தது காதல் முத்தமாக இருந்தாலும் அதிலும் ஒரு மனதார நன்றியுணர்வை வெளிப்படுத்தியதை நன்றாக உணர முடிந்தது.
மதி தான் என் உதட்டில் இருந்து தன் உதட்டை விடுவித்துக் கொண்டு எதுவும் சொல்லாமல் வெட்க சிரிப்புடன் தன் வீட்டின் உள்ளே சென்றுவிட்டாள். அவள் சென்ற பிறகு அங்கிருப்பது நல்லதில்லை என்பதால் என்னுடைய ப்ளாட்டிற்கு வந்தேன்.
ப்ளாட்டினுள் நுழைந்ததும் படுக்க மனமில்லாமல் இந்த இரவில் மதி வந்ததிலிருந்து எல்லாவற்றையும் ஒருமுறை அசை போட்டு பார்த்தேன். அதையெல்லாம் நினைக்கும் போதே ‘இது எல்லாம் காலம் செய்த ஜாலம்’ என நினைத்துக் கொண்டேன். பின் எப்போது சென்று படுத்தேன். எப்படி தூங்கினேன் என தெரியவில்லை.
மறுநாள் காலையில் ஹாலில் இருந்த மொபைல் அடிக்கும் சத்தம் கேட்டு தான் கண் விழித்தேன். காலையில் கண் விழித்ததும் மணியை பார்க்க 8க்கு மேல் ஆகியிருந்தது. என் வாழ்நாளில் இவ்வளவு நேரம் தூங்கியதே இல்லை. இவ்வளவு தூரம் நிம்மதியான ஒரு தூக்கத்தை தூங்கியதும் கிடையாது.
இதெல்லாம் காலம் செய்த ஜாலத்தால் நடந்தது என நினைக்கும் போது காலம் எப்போதும் கசப்பை தராது என்பதை அறிந்து கொண்டேன். முதல் முறை கால் கட் ஆகி மீண்டும் அடிக்க யாரென்று போய் பார்த்தேன். பெயரில்லாமல் வெறும் எண் மட்டும் வந்திருந்தது. காலை அட்டன் செய்து. ‘ஹலோ’ என்றேன். மறுமுனையில் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. மீண்டும் கொஞ்சம் சத்தமாக ‘ஹலோ’ என்றேன். அப்போதும் எந்த பதிலும் வரவில்லை. கடைசியாக
“ஹலோ யாரு? கால் பண்ணிட்டு பேசாம இருந்தா என்ன அர்த்தம் கேட்க?”
மறுமுனையில் இருந்து “உங்களையும் உங்களின் குரலையும் ரசிக்குறாங்க அர்த்தம்” என்று ஒரு பெண் பேச்சு மட்டும் வந்தது. மதியின் குரல் தான் என தெரிந்துக் கொண்டேன்.
“ஓ. இது என்ன எஸ். பி. பி குரலா? பேசுறது கூட பாடுற மாதிரி இருக்க”
“எஸ். பி. பி குரலை விட என்னை நேசிச்சவரோட குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும். ”
“ஓ. ஐ. சி. ”
“சரிங்க. அப்பறம் நானே கால் பண்றேன். நீங்க பண்ணாதீங்க. இதான் என் நம்பர் அத சொல்ல தான் கால் பண்ணேன். ” சொல்லிவிட்டு பதிலுக்கு கூட காத்திருக்காமல் காலை கட் செய்தாள்.
மதியினுடைய மொபைல் நம்பர் கூட அவளை போல் பேன்ஸியாக தான் இருந்தது. இந்த எண்ணை ‘மதி மை லவ்’ என ஸ்சேவ் செய்துவிட்டு காலை வேலைகளை பார்க்க சென்றுவிட்டேன். அன்றைக்கு மதி கால் பண்ணுவாள் என எதிர்பார்த்தேன்.
ஆனால் பண்ணவில்லை. அவளின் மகள்கள் இருவரும் அந்த எதிர்பாரா பிரச்சனையில் சிக்கியதால் எப்படியும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பார்கள். அதனால் அவர்களுடனே இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும் என எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொண்டேன்.
அதன் பின் வந்த அடுத்தடுத்த வாரத்தில் இரண்டு மூன்று தடவை அவளை அந்த அபார்ட்மெண்டில் பார்க்க முடிந்தது. அவளை பார்த்தாலும் என்னாலும் அவளாலும் பேசிக் கொள்ள முடியவில்லை. வெறும் பார்வை பரிமாற்றம் மட்டும் தான் பண்ண முடிந்தது.
அவளின் மனநிலை என்ன என்பதை அவளின் அந்த பார்வையிலே தெளிவாக காட்டிவிடுவாள். என்னை கடந்து செல்லும் போது பார்க்கும் அந்த பார்வையில் ஒருவித காதல் மகிழ்ச்சி. எதிர்பார்ப்புடன் ஒரு ஏக்கம் என இரண்டும் இருப்பதை தெளிவாக உணர்த்திவிட்டு செல்வாள்.
நந்திதா நந்தனா இருவரும் அந்த மன உளைச்சலில் இருந்து வெளியே வந்து அவர்களின் சகஜ மனநிலையை அடைய கிட்டதட்ட இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
அதுவரை நாங்கள் இருவரும் பார்க்கும் போதெல்லாம் யாருக்கும் தெரியாமல் வெறும் பார்வை பரிமாற்றம் மட்டும் செய்துக் கொண்டோம். மதியின் மகள்களை பற்றி அவ்வப்போது வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் மட்டும் அனுப்பி கேட்டுக் கொள்வேன். மதியும் கேட்பதற்கு மட்டும் பதில் அனுப்புவாள். அதை தவிர அந்த இரண்டு மூன்று வாரங்களுக்கு பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எதுவும் நடக்கவில்லை.
எதேர்ச்சியாக ஒரு நாள் மதியிடம் இருந்து கால் வந்தது. அந்த சமயம் பார்த்து கிச்சனில் சப்பாத்தி போட்டுக் கொண்டிருந்ததால் அதை எடுக்கவில்லை. அப்போது மதி தான் கால் செய்திருக்கிறாள் என்பது எனக்கு தெரியாது.
சப்பாத்தியை கல்லில் போட்டு முடித்துவிட்டு போய் பார்த்த போது தான் மதி கால் செய்திருக்கிறாள் என்பது தெரிந்தது. உடனே அவளுக்கு வாட்ஸ்ஆப்பில் “தற்போது கால் செய்லாமா?” என கொஞ்சம் கிண்டலாக மெசேஜ் அனுப்பினேன். அதன் பின் இரண்டு நிமிடங்களுக்கு அவளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
அதற்கு பின் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தான் அவளிடமிருந்து
“தற்போது வேண்டாம் என சொன்னால் என்ன செய்வீர்கள்?” பதில் வர
“மகாராணியின் உத்தரவை மகாசாசனம். அதை மீறி என்னால் என்ன செய்ய முடியும்?” என பதிலுக்கு நான் அனுப்ப
“அப்ப்ப்பா. நம்பிட்டேன். நம்பிட்டேன். ”
“நம்பிவிட்டால் நல்லது ராணியாரே. ”
“உங்கள. முடியல. இருங்க” கால் பண்றேன் சொல்லி கால் செய்தாள். அவளுடைய கால் வந்ததுமே அதை ரெக்கார்ட் மோடில் போட்டுவிட்டு தான் காலை அட்டன் செய்து பேச ஆரம்பித்தேன்.
“வணக்கம் மகாராணியாரே”
“அய்யோ நா மகாராணிலா இல்ல. அப்போ சொன்ன மாதிரியே இப்பவும் சொல்லிட்டு இருக்காதீங்க. ”
“ஏன். ஏன். சொல்லக்கூடாது? நா அப்படி தான் சொல்லுவேன். நல்லா கத்தி சொல்லுவேன். நீ மகாராணி. மகாராணி தான்” ரஜினி ஸ்டைலில் சொல்ல அந்த பக்கம் இருந்து சிரிப்பு சத்தம் தான் கேட்டது.
“என்ன சொன்னாலும்
எப்படி மாத்தி சொன்னாலும்
நீயே
எந்தன் மனதின் ராணி
எந்தன் மகிழ்ச்சியின் ராணி
எந்தன் மூடிசூடா மணவாழ்க்கையின் மகாராணி நீயே
அன்று மட்டுமல்ல. இன்றும். என்றும். என்றென்றும். ” என இப்போதும் அவள் மீதிருக்கும் காதலை சொல்லிவிட்டேன்.
அப்படி சொன்னதும் மதியிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. உடனே நான்
“மதி இருக்கியா?” என இருபத்தி ஏழு வருடங்களுக்கு பிறகு மதி இப்போதும் என் காதலி தான் என்ற உரிமையில். அவளை ஒருமையில் கூப்பிடுகிறேன்.
“உன்னதான் கேக்குறேன் மதி இருக்கியா?”
“லைன் தான் இருக்கேன்ங்க. ”
“இல்ல பதிலே பேசல. அதான் இருக்கியா தெரிஞ்சுக்க கேட்டேன். ”
“இருக்கேன்ங்க. ” மட்டும் சொன்னாள்.
“என்ன பேச்சோட சவுண்ட் கீழே போயிடுச்சு. ”
“இல்ல. ” ஏதோ சொல்ல வந்துவிட்டு பின்
“ஒன்னுமில்ல. ” என்றாள்.
“ஏய். ஏதோ சொல்ல வந்த தென் சடனா ஒன்னுமில்ல சொல்லிட்ட என்ன ஆச்சு. ?”
“ஒன்னுமில்லைங்க. ”
“ஒன்னும் இல்லை சொல்றதுல கூட சந்தோஷமே இல்லையே”
“அதலாம் இல். லி. ங்க. ” சொல்ல முடியாமல் ஒரு தவிப்போடு சொன்னாள்.
“ஏன் என்ன ஆச்சு? உன்ன ஏதாவது கஷ்டபடுத்தினா?”
“அய்யோ அதலாம் எதும் இல்லிங்க” பதறி கொண்டு சொல்ல
“பின்ன ஏன் அப்படி பேசின சொல்லு. நீ சொன்னா தான எனக்கு தெரியும். இப்ப இருக்குற மதி பத்தி சொன்ன தான் எனக்கு தெரியும். இல்லைனா எப்படி தெரியும். ?”
“பரவாயில்ல. முன்ன பேசுனதுக்கும் இப்ப பேசுறதுக்கும் நல்லா வித்தியாசம் தெரியுது. இப்ப பேசுறதுல ஒரு நிதானம் ஒரு மெச்சூரிட்டி அதலாம் நல்லா தெரியுது. ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் உங்கட்ட இன்னும் மாறவே இல்ல. எப்படி பேசின எனக்கு பிடிக்கும் நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீங்க”
“அப்படியா?”
“ஆமா. கவிதை மாதிரி பேசின எனக்கும் பிடிக்கும் தெரிஞ்சு தான அப்படி பேசுறிங்க. ”
“அப்படியெல்லாம் இல்ல. அப்ப அப்ப இது மாதிரி என் மனசுல தோனுறத தான் பேசுறேன். எழுதி வச்சுலா பேசல. ”
“ஏதோ ஒன்னு எனக்கு பிடிச்ச மாதிரி செய்றீங்கள. இன்னொன்னு கிடைச்ச சான்ஸ் கரெக்ட் யூஸ் பண்ணி சொல்ல வேண்டியத சொல்லிடுறீங்க. ஒரு ஆம்பளையா அப்பவும் சரி இப்பவும் சரி மனசுல இருக்குறத வெளிப்படையா சொல்லிடுறீங்க. அப்ப ஒரு பொண்ண முடிவு எடுக்க மாச கணக்கா ஆச்சு.
ஆனா இப்ப நிறைய பக்குவம் பட்டியிருந்தாலும் உங்களுக்கு என்ன முடிவு சொல்றது எனக்கு தெரியல. அப்போ என் அம்மாக்காக பயந்தேன். இப்போ நா ஒரு அம்மாவா இருக்கேன் பயப்புடுறேன்” என மனதில் நடந்திக் கொண்டிருக்கும் போராட்டத்தை பற்றி சொன்னாள்.
இந்த முறை அவளின் மனதில் நடந்து கொண்டிருக்கும் மன போராட்டத்தை சொன்னவுடன் எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அவள் மனம் படும் பாட்டிற்கு என்ன சொல்லி ஆறுதல் படுவதென்று என யோசித்துக் கொண்டிருந்தேன். மறுமுனையில் இருந்து மதி
“என்னங்க எதுவும் பேசமாட்றீங்க. ?”
“இல்ல மதி உன் மனசு என்ன பாடு படுது நீ சொல்றதுல இருந்து புரியது. எனக்கு காதலியா இருக்குறத விட உன் பொண்ணுங்களுக்கு ஒரு அம்மாவா இருக்குறது தான் இப்போதைக்கு முக்கியம். இந்த முறையும் நாம சேரனும் இருந்தா கண்டிப்பா சேருவோம். அப்படி முடியலைனா கூட பரவாயில்ல. நாம காதலர்கள் நமக்கு மட்டுமே தெரிஞ்சு புருஞ்சுக்கிட்டா கூட போதும். ”
“ம்ம். சரிங்க. ”
“இத நா முழு மனசோட சந்தோஷமா தான் சொல்றேன். ”
“சரிங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. ”
“எல்லா காதலும் மணவறை வரை போவதில்லை. அப்படியே போனாலும் அவையெல்லாம் பிணவறை வரை நிலைப்பதில்லை. ”
“நம் காதலை சேரனுமா வேண்டாமானு காலமோ? கடவுளோ? தீர்மானிக்கட்டும். நாம போட்டு குழப்பிக்க வேண்டாம். மனச போட்டு குழப்பிக்காம நிம்மதியா உன் வேலைய போய் பாரு. ”
“சரிங்க. நீங்க இப்படி சுயநலமில்லாம பேசுனது ரொம்ப சந்தோஷமா இருக்குங்க. உங்களோட இந்த நல்ல மனசுக்காகவே காதல் ஒன்னும் சேரனும் கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன்ங்க. இப்ப சாப்பிடுங்க” சொல்லி காலை கட் செய்தாள் மதி.
மதி காலை கட் செய்த பிறகு மனதில் இருக்கும் காதலை வெளிப்படுத்திய பின் தேவையில்லாததை பேசி நம் காதலுக்கு நாமே எமனாக இருந்து அதை முடித்து கொண்டாமா என்ற எண்ணம் கூட மனதில் ஒரு ஓரமாக எழ செய்தது. என்ன தான் மதியின் சூழ்நிலை கருதி தனி மனிதனாக பேசினாலும் அவள் மீதியிருக்கும் ஆழமான காதலை நினைத்து பார்க்கும் போது அவளை கொஞ்சம் பொறுமையாக சிந்தித்து பார்க்க சொல்லி கூட முடிவை கேட்டு இருக்கலாம் என இப்போது தோன்றுகிறது.
அந்த சமயம் பார்த்து மனசாட்சி முன்னால் வந்து.
“உன் மனசு எப்படினா மரத்துக்கு மரம் தாவிட்டே இருக்குற குரங்கு மாதிரி. உன் மனசு மட்டுமல்ல. பாதி பேர்க்கு மேல இதே நிலைம தான். நீ தெரிஞ்சு சொன்னியா தெரியாம சொன்னியா எனக்கு தெரியல. ஆனா சரியா தான் சொல்லியிருக்க.
முன்ன இருந்தத விட இப்ப அவ மனசுல ஒரு உயரமான இடத்த பிடிச்சிருக்க. இத கெடுத்துக்காத. தெரிஞ்சோ தெரியாமலோ உன் வாயில இருந்தே காலமோ கடவுளோ நம்ம காதல சேத்து வைச்சா வைக்கட்டும் சொல்லிட்ட.
அப்படியே அத விட்டுட்டு. காலத்து மேல நம்பிக்க வச்சாலும் சரி. கடவுள் மேல வச்சாலும் சரி. அது உன் இஷ்டம். ஆனா புத்திசாலி மாதிரி நா என் மேல தான் நம்பிக்கை வப்பேன் சொல்லி ஏதாவது பண்ணி உன் காதலுக்கு நீயே எமனாகிடாத. சொல்ல வேண்டியத சொல்லிட்டேன். இனி நீ தான் முடிவு எடுக்கனும்” சொல்லி மனசாட்சி மறைந்தது.
அப்போதைக்கு எனக்கு இருந்த குழப்பத்தில் அதை பற்றி யோசிக்காமல் சப்பாத்தியை சாப்பிட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தினேன். அதை முடித்த பிறகு என்ன தான் அதை பற்றி யோசித்தாலும் என் மேல் நம்பிக்கையுள்ள ஒரு தனி மனிதாக இருந்து அடுத்து மேற்கொண்டு என் காதலுக்காக என்ன செய்வது என தெரியவில்லை. அதனாலே நடப்பது நடக்கட்டும் என இருந்துவிட்டேன்.
மீண்டும் அவளோடு வருவேன்.